For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இங்கிலாந்து நாட்டவரிடம் இருந்து சசி கோஷ்டியால் குறுக்கு வழியில் அபகரிக்கப்பட்ட கொடநாடு எஸ்டேட்!

இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவரிடம் இருந்து சசிகலா கோஷ்டியால் குறுக்கு வழியில் அபகரிக்கப்பட்டதுதான் ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

சென்னை: நீலகிரி மாவட்டத்தில் உள்ள கொடநாடு எஸ்டேட்டை இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பீட்டர் கிரேக் ஜான்ஸ் என்பவரிடம் இருந்து ஜெயலலிதாவுக்காக சசிகலா கோஷ்டியினர் குறுக்கு வழியினர் அபகரித்த கதை அதிரவைக்கக் கூடியதாகும்.

கோத்தகிரியில் இருந்து 15 கி.மீ. தூரத்தில் கொடநாடு தேயிலை தோட்டம் உள்ளது. 1992ஆம் ஆண்டு ஜெயலலிதாவுக்காக வாங்கப்பட்ட இந்த எஸ்டேட்டின் முழு வரலாற்றையும் பார்ப்போம்.

இயற்கை எழில் கொஞ்சும் ...

இயற்கை எழில் கொஞ்சும் ...

மேற்கு தொடர்ச்சி மலையில் இந்த எஸ்டேட் சுமார் 900 ஏக்கர் பரப்பளவை கொண்டது. இதில் 5 ஆயிரம் சதுர அடி பரப்பிலான பிரமாண்ட பங்களா, ஹெலிகாப்டர் ஓடுதளம், படகு குழாம், தேயிலை தொழிற்சாலை, எஸ்டேட்டை சுற்றி பார்க்க பேட்டரி கார்கள் என பல்வேறு வசதிகள் உள்ளன. இந்த எஸ்டேட்டுக்குள் அத்துமீறி யாரும் உள்ளே நுழைய முடியாத வகையில் 11 நுழைவு வாயில்கள் அமைக்கப்பட்டுள்ளன.

வெள்ளைக்காரர் பங்களா

வெள்ளைக்காரர் பங்களா

இந்த எஸ்டேட்டானது இங்கிலாந்து நாட்டு குடியுரிமை பெற்ற பீட்டர் கிரேக் ஜோன்ஸ் என்பவருக்கு சொந்தமானது. அவர்களது தந்தை கடந்த 1975-ஆம் ஆண்டு இந்த எஸ்டேட்டை ரூ.33 லட்சத்துக்கு வாங்கினார். அவரது காலத்துக்கு பிறகு அவரது மகன் உள்ளிட்டோர் காபி, டீ ஆகியவற்றை ஏற்றுமதி செய்யும் தொழிலை செய்து வந்தனர்.

கடன் நெருக்கடி

கடன் நெருக்கடி

வங்கிக் கடன் நெருக்கடியால் இந்த எஸ்டேட்டை விற்று கடனை அடைக்க ஜோன்ஸ் திட்டமிட்டார். அப்போதுதான் இந்த எஸ்டேட் சசிகலா கண்களில் பட்டது. உடனே பேரம் பேசப்பட்டது. பேரம் படியாததால் சசிகலா கோஷ்டி தங்களது 'ஸ்டைலில்' கிரேக் ஜோன்ஸை மிரட்டியும் பார்த்தது. அத்துடன் வேறு யாருமே கொடநாடு எஸ்டேட்டை வாங்கவிடாதபடியும் நெருக்கடி கொடுத்தனர்.

புகார் எடுபடவில்லை

புகார் எடுபடவில்லை

வேறுவழியில்லாத நிலையில் சென்னை தொழிலதிபர் குடும்பத்தினர் மூலம் கொல்லைப்புறமாக கொடநாடு எஸ்டேட்டை அபகரிக்கும் வேலையில் இறங்கியது சசிகலா கோஷ்டி. வேறுவழியே இல்லாமல் வெறும் ரூ.9.50 கோடிக்கு விற்க ஜோன்ஸ் முன்வந்தார். ஆனால் அதிலும் கறார் காட்டி வெறும் ரூ.7.50 கோடிக்கு பேசம் பேசி ஆட்டைய போட்டது சசிகலா கோஷ்டி. அத்துடன் ஜோன்ஸையும் பங்கு தாரராக சேர்த்து கொண்டு எஸ்டேட்டின் கடனை அடைப்போம் எனவும் சசிகலா கோஷ்டி தரப்பில் உறுதியளிக்கப்பட்டது.

ஏமாற்றிய சசி கோஷ்டி

ஏமாற்றிய சசி கோஷ்டி

வாக்குறுதி அளித்தபடி கடனை சசிகோஷ்டி அடைக்கவில்லை. இதனால் இதனால் மனம் நொந்த ஜோன்ஸ் தனக்கு ரூ.7.50 கோடிடையும் செட்டில் செய்துவிடும்படியும் பங்குதாரராக உள்ள தாம் விலகி கொள்வதாகவும் தெரிவித்தார். ரூ.7.50 கோடி வாங்கிய கையோடு ஜோன்ஸ் சசி கோஷ்டியிடம் இருந்து தப்பினார்.

1500 ஏக்கராக விரிவாக்கம்

1500 ஏக்கராக விரிவாக்கம்

முதலில் 900 ஏக்கர் கொண்ட எஸ்டேட்டை பின்னர் 1600 ஏக்கராக விரிவாக்கம் செய்தது சசி கோஷ்டி. இத்தனைக்கும் ஜெயலலிதாவுக்கு 10 சதவீத பங்கு மட்டுமே உள்ளது. முதல்வராக இருந்த போது ஜெயலலிதா அவ்வப்போது இங்கு வந்து தங்கி ஓய்வெடுப்பது வழக்கம். வெறும் ரூ.7.5 கோடிக்கு வாங்கப்பட்ட எஸ்டேட்டின் தற்போதைய மதிப்பு ரூ.200 கோடிகளாகும். இப்போது ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து கொலை.. கொள்ளை முயற்சி என மீண்டும் பரபரப்பில் சிக்கியுள்ளது கொடநாடு எஸ்டேட்.

English summary
Kodanad Estate was acquired from low cost from England family for just Rs. 7 crores. But now its worth is Rs.200 crores.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X