For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தலைவர்னா எப்படி இருக்கனும் தெரியுமா...?

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

சென்னை: தலைவர் என்றால் எப்படி இருக்க வேண்டும்.. பழைய தலைவர்களையெல்லாம் இழந்த விளைவை இப்போது மக்கள் நேரில் பார்த்து உணர ஆரம்பித்து விட்டனர்.

ஒரு கட்சியின் தலைவர் என்றால் கட்சியை முன்னெடுத்து செல்வதும், தொண்டர்கள் மனதில் நீங்கா இடம் பிடிப்பது, மக்கள் நல திட்டங்களை செய்வதும் மட்டுமல்லாமல் அதையும் தாண்டி மிகப் பெரிய பொறுமைசாலியாக இருக்க வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது. காரணம் இது சோசியல் மீடியா காலம்.

நேருக்கு நேராக நிற்க வைத்து திட்டினால் கூட தாங்கிக் கொள்ளும் அளவுக்கு தலைவர்கள் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. காரணம் மக்கள் அத்தனை பிரச்சினைகளை இன்று சந்தித்துக் கொண்டுள்ளனர் (இந்தப் பிரச்சினைகளுக்கும் கூட பெரும்பாலும் இதே தலைவர்கள்தான் காரணமாக இருப்பது வேற விஷயம்) பொது வாழ்க்கைக்கு அடிப்படை தேவையே பொறுமை, நிதானம், சிந்திக்கும் செயல்திறன் ஆகியவைதான்.

ஆயிரம் விமர்சனங்கள் ஆயிரம் விமர்சனங்கள்

ஆயிரம் விமர்சனங்கள் ஆயிரம் விமர்சனங்கள்

பழுத்த மரம் கல்லடிப்படத்தான் செய்யும் என்பது போல் பொது வாழ்க்கைக்கு என்று வந்துவிட்டால் ஆயிரம் விமர்சனங்கள் நம்மை சூழ்ந்து கொள்ளும். ஆனால் இவற்றுக்கு நிதானமாக பதில் அளிக்க வேண்டியது அரசியல்வாதிகளின் கடமை ஆகும். அதுவும் தலைவர் பொறுப்பில் இருப்போருக்கு இது மிகவும் அவசியம் ஆகும்.

ஜெ. போன்றோர்

ஜெ. போன்றோர்

பெரியார், அண்ணா, காமராஜர் ஆகியோர் விமர்சனங்களை புன்னகையுடன் எதிர்கொண்டு, சிறப்பாக அதை சமாளித்தனர், சரி செய்தனர். அதிலிருந்து தவறுகளை சரி செய்து அரசியலில் வீறு நடை போட்டனர். அதுபோல்தான் எம்ஜிஆர், கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோரும்.

தனிப்பட்ட முறை

தனிப்பட்ட முறை

இவர்கள் எப்போதும் யாரையும் தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்ததில்லை. இவர்கள் மீதான விமர்சனங்களையும் நேர்மறையாகவே எடுத்து கொண்டனர். ஆனால் புள்ளிவிவரங்களுடன் இவர்கள் பேசி எதிராளியின் வாயை அடைத்தனரே தவிர, யாரையும் தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்யவில்லை.

சர்வாதிகாரமாக மாறிவிடும்

சர்வாதிகாரமாக மாறிவிடும்

ஜெயக்குமார் மீது எத்தனை எத்தனை விமர்சனங்கள். அவரது உருவத்தை வைத்து கிண்டலடித்தாலும் அவற்றை படித்து பார்த்து ரசித்து விட்டு சென்றுவிடுவார். எனவே அரசியல்வாதிகளுக்கு பொறுமை அவசியம் தேவை. தோல்விகளை படிக்கற்காக எடுத்துக் கொள்வது போல் விமர்சனங்களை வெற்றிப்படிகளாக நினைத்து அதை புறந்தள்ள வேண்டும். எதற்கெடுத்தாலும் கைது, வழக்கு என்றால் அது சர்வாதிகாரமாக மாறிவிடும் என்பது நிதர்சனம்.

English summary
A leader shouldnot lose his/her cool despite of criticised by others.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X