For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சீப்பை மறைத்து வைத்து விட்டால் எத்தனை நாட்களுக்கு கல்யாணத்தை நிறுத்த முடியும்? ஜெயக்குமார் அடடே

சீப்பை மறைத்து வைத்து விட்டால் எத்தனை நாட்களுக்கு கல்யாணத்தை நிறுத்த முடியும்? என காவிரி விவகாரத்தில் மத்திய அரசை அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி-வீடியோ

    சென்னை: சீப்பை மறைத்து வைத்து விட்டால் எத்தனை நாட்களுக்கு கல்யாணத்தை நிறுத்த முடியும்? என காவிரி விவகாரத்தில் மத்திய அரசை அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

    காவிரி தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது காவிரி தொடர்பான வரைவு திட்ட அறிக்கையை மே 14ஆம் தேதி தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

    மேலும் தமிழகத்துக்கான 4 டிஎம்சி தண்ணீர் விவகாரத்தில் மத்திய அரசு எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை. இது தமிழக விவசாயிகளிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.

    சீப்பை மறைத்து வைத்தால்

    சீப்பை மறைத்து வைத்தால்

    இந்நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், காவிரி விவகாரத்தில் மத்திய அரசின் தாமதம் பற்றி கருத்து தெரிவித்தார். அதாவது, சீப்பை மறைத்து வைத்து விட்டால் எத்தனை நாட்களுக்கு கல்யாணத்தை நிறுத்த முடியும்? என காவிரி விவகாரத்தில் மத்திய அரசை விமர்சித்தார்.

    நம்பத் தயாராக இல்லை

    நம்பத் தயாராக இல்லை

    காவிரி விவகாரத்தில் மத்திய அரசை நம்பத் தயாராக இல்லை என்றும் மத்திய அரசுடன் இணக்கமான சூழ்நிலையும் இல்லை என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

    உரிமையை விட்டுக்கொடுக்காது

    உரிமையை விட்டுக்கொடுக்காது

    காவிரி வழக்கில், உச்சநீதிமன்றம் சாதகமான தீர்ப்பை வழங்கும் என்ற நம்பிக்கை 100% உள்ளது என்று கூறிய அமைச்சர் ஜெயக்குமார், தமிழக உரிமையை எந்த காலத்திலும் தமிழக அரசு விட்டுக் கொடுக்காது என்றும் கூறினார்.

    புரிந்து கொள்ள வேண்டும்

    புரிந்து கொள்ள வேண்டும்

    மேலும் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் போராட்டம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், அரசின் நிதி நெருக்கடியை புரிந்து கொள்ள வேண்டும் என்றும் அரசு ஊழியர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

    ஆணவம் இல்லாத அரசு

    ஆணவம் இல்லாத அரசு

    ஜாக்டோ- ஜியோ போராட்டத்தில் ஆசிரியர் யாரும் இறக்கவில்லை என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். ஆணவம் இல்லாத அரசுதான் தமிழக அரசு என்பதை ஸ்டாலின் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார்.

    தீர்க்க குழு

    தீர்க்க குழு

    அரசுக்கு வரும் ரூ. 100 வருவாயில் ரூ. 70 அரசு ஊழியர்களுக்காகவே செலவிடப்படுகிறது என்றும் அரசு ஊழியர்கள் பிரச்சினையை தீர்க்க குழு அமைக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

    English summary
    How many days can you stop getting married if you keep the comb hidden? Minister Jayakumar criticized the central government in the case of Cauvery.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X