For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

"சீக்ரெட்"டை வெளியிட்ட சரவணன் எம்.எல்.ஏ.. பத்து லட்சத்தால் வந்த வினை!

Google Oneindia Tamil News

சென்னை: ஓ.பன்னீர்செல்வம் அணியின் சரவணன் பேசிய பண பேர வீடியோவால் அரசியல் மட்டத்தில் அதிர்வலை ஏற்பட்டுள்ளது. மூன்று மாதங்களுக்கு முன்பு தனியார் தொலைக்காட்சியில் பணிபுரியும் சிலரால் இந்த வீடியோ காட்சிகள் எடுக்கப்பட்டன. பேரம் படியாததால், வேறு தொலைக்காட்சிக்கு விற்றுவிட்டனர்' என்கின்றனர் அ.தி.மு.க வட்டாரத்தில்.

அண்ணா தி.மு.கவின் சட்டமன்றத் தலைவராக சசிகலா தேர்வு செய்யப்பட்ட நிலையில், ஓ.பன்னீர்செல்வம் நேரடி மோதலைத் தொடங்கினார். எம்.எல்.ஏக்கள் அணி மாறிவிடக் கூடாது என்பதற்காக, அவர்களை கூவத்தூரில் உள்ள கோல்டன் பே ரிசார்ட்டில் தங்க வைத்தார் சசிகலா.

இந்த ரிசார்ட்டில் இருந்து தப்பி வந்த மதுரை தெற்குத் தொகுதி எம்.எல்.ஏ சரவணன், பன்னீர்செல்வம் அணியில் இணைந்தார். இதைப் பற்றி தனியார் தொலைக்காட்சி வெளியிட்டுள்ள வீடியோவில் பேசும் சரவணன், 'எம்.எல்.ஏக்களை விமான நிலையத்தில் மடக்கி 2 கோடி ரூபாய் தருவதாக கூறினர். எம்.எல்.ஏ விடுதியில் இருந்து கவர்னர் மாளிகை சென்றபோது நான்கு கோடியாக மாறியது. கூவத்தூர் விடுதியில் வைத்து ஆறு கோடி ரூபாய் தருவதாக உறுதியளித்தனர். தங்கமாகவும் தருவதாகக் கூறினர்.

இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வென்ற பிற கட்சி எம்.எல்.ஏக்களுக்கு 10 கோடி ரூபாய் பேரம் பேசப்பட்டது. ஓ.பி.எஸ் முதல்வரானால் நாங்கள் 11 பேரும் அமைச்சர்களாகி விடுவோம். ரூ.500 கோடிதான் எங்கள் இலக்கு' என அதிர வைத்திருக்கிறார்.

வேண்டப்பட்டவரிடம் விவரித்த சரவணன்

வேண்டப்பட்டவரிடம் விவரித்த சரவணன்

இப்படியொரு வீடியோ வெளியானது குறித்து, அ.தி.மு.க வட்டாரத்தில் பேசினோம். "கூவத்தூர் விடுதியில் இருந்து சரவணன் தப்பி வந்தபோதே, நடந்த விஷயங்களைப் பற்றி நண்பர்களிடம் விளக்கிக் கூறினார். அந்தநேரத்தில், அவருக்கு நன்கு தெரிந்த நபர் ஒருவர், என்ன பேரம் பேசினார்கள் என்பது குறித்து இயல்பாக விளக்கிக் கொண்டிருந்தார்.

பேரம் பேசிய சானல் குரூப்

பேரம் பேசிய சானல் குரூப்

இந்த வீடியோ காட்சிகளைக் கையில் வைத்துக் கொண்டே, வெளியில் அதிகம் தெரியாத தொலைக்காட்சி ஒன்றின் ஆட்கள் சரவணனிடம் பேரம் பேசியுள்ளனர். அவர்களது பேரத் தொகை பத்து லட்ச ரூபாய்தான். அந்தப் பணத்தைத் தராமல் அவரும் போக்குக் காட்டிக் கொண்டிருந்தார்.

10 லட்சத்தால் வந்த வினை

10 லட்சத்தால் வந்த வினை

ஒருகட்டத்தில், 'பணத்தையெல்லாம் தர முடியாது. அந்த வீடியோ வெளியானால் எனக்கு எந்தச் சிக்கலும் வரப் போவதில்லை. தாராளமாகப் போட்டுக்கோ' என கொதித்திருக்கிறார். இதையடுத்து, அந்த வீடியோவை தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பக் கொடுத்துவிட்டனர்.

ஷாக்காகி விட்டார்

ஷாக்காகி விட்டார்

நேற்று இந்தக் காட்சிகள் வெளி வந்தபோது அதிர்ந்து போய்விட்டார் சரவணன். உள்கட்சி எம்.எல்.ஏக்களிடம் இருந்து தொடர்ந்து போன் கால்கள் வந்த வண்ணம் இருந்திருக்கிறது. அவர்களுக்கு அவரால் பதில் சொல்ல முடியவில்லை.

இப்படித்தான் காட்டிக் கொடுப்பியா?

இப்படித்தான் காட்டிக் கொடுப்பியா?

'இப்படித்தான் காட்டிக் கொடுப்பியா?' என ஒரு எம்.எல்.ஏ கடுப்பைக் காட்ட, 'அவன் கேட்ட காசைக் கொடுத்திருந்தால், எந்தச் சிக்கலும் வந்திருக்காது. 'இது என்ன செய்துவிடப் போகிறது?' என அலட்சியமாக இருந்துவிட்டேன். தயவு செய்து மன்னித்துவிடுங்கள்' எனக் கேட்டிருக்கிறார்.

சேனல் ஆளுக்கு வலைவீச்சு

சேனல் ஆளுக்கு வலைவீச்சு

தற்போது பணம் கேட்டு மிரட்டிய, அந்த நபர்களைத் தீவிரமாகத் தேடி வருகிறார்" என்றார் விரிவாக. நாளை சட்டசபை கூடும் நேரத்தில் இந்த வீடியோ காட்சிகள் புயல் கிளப்பலாம் என்பதால், பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தியுள்ளார் சரவணன் எம்.எல்.ஏ.

English summary
Sources close to Madurai South MLA Saravanan has clarified that how the controversial video was leaked?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X