For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மெல்ல மெல்ல மரித்துப் போகும் மனிதம்.. விடிவு நம் கையில்!

Google Oneindia Tamil News

சமீப காலமாக தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் கொலைகள் நம்மை அதிரவைக்கின்றன. தவறு யார் மீது? தான் பெற்ற பிள்ளையை கண்டித்து வளர்க்காத பெற்றோர் மீதா, தார்மீக விஞ்ஞானத்திற்கு (moral science) மற்றும் மனித நேயத்திற்கு முக்கியத்துவம் அளிக்காது பணம் மற்றும் மதிப்பெண்ணிற்கு மட்டும் முக்கியத்துவம் அளித்து நம் பிள்ளைகளுக்கு பண்பை வளர்ப்பதை விட போட்டி, பொறாமை மற்றும் பல்வேறு தீய குணங்களை விதைத்துள்ளார்களே இந்த பள்ளிகளின் தவறா? அல்லது நம் பாட திட்டம் நம் பிள்ளைகளின் நற் பண்பை ஊக்குவிக்க தவறி விட்டதா? அல்லது இந்த சமூகம் நமது எண்ண ஓட்டங்களை புரிந்து கொள்ளாது நம் இளைஞர்களை இவ்வாறு மாற்றியுள்ளதா?.

 How to save our kids from the Social ills

பெற்றோர்களின் தவறு:

ஆண் பிள்ளை, பெண் பிள்ளை என்ற வேறுபாடு இல்லாமல் கண்டிக்க வேண்டிய இடத்தில் காட்டாயம் கண்டித்து தம் பிள்ளைகள் கேட்கும் அனைத்தையும் (நம்மால் முடியாத வற்றையும்) வாங்கி கொடுக்காமல், அவர்களுக்கு நம் கேட்கும் அனைத்தும் இந்த உலகத்தில் கிடைக்காது என்கிற எண்ணத்தை உருவாக்க வேண்டும்.

தம் பிள்ளைகளுக்கு மதிப்பெண், பணம், புகழ் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை மட்டும் சொல்லாமல் நேர்மை, நியாயம், மனிதநேயம், அடுத்தவர்களுக்கு விட்டு கொடுப்பது ஆகிய நற் பண்புகளையும் சொல்லி கொடுக்க வேண்டும்.

பள்ளியில் ஆசிரியை தங்கள் பிள்ளையை திட்டினாலோ அடித்தாலோ, பிள்ளைகளின் முன் ஆசிரியர்களை தரைகுறைவாக பேசுவதோ, அல்லது ஆசிரியரிடம் சண்டை இடுவதோ தவறு. மாதா பிதா குரு தெய்வம் என்றதற்கு இணங்க குருவை தெய்வமாய் மதிக்க கற்று தருவோம் நம் பிள்ளைகளுக்கு.

குழங்கைகள் விளையாடும் வீடியோ கேம்ஸ் இல் புதையுண்டு கிடக்கிறது கொடூரம். அடுத்தவரை கொலை செய்தால் தான் நாம் ஜெயிக்க முடியும் என்கிற எண்ணத்தை விதைக்கிறது சில வீடியோ கேம்ஸ்.

ஆகவே பெற்றோர்களே உங்கள் பிள்ளைகளின் எதிர் காலம் உங்கள் இடத்தில் தான் உள்ளது என்பதை மறவாமல் தங்களது பிள்ளைகளை நன்றாக கவனியுங்கள். அளவிற்கு மீறிய செல்லமும் நம் பிள்ளைகளுக்கு நஞ்சு. பொறுப்பான பெற்றோர்களாக நம் பிள்ளைகளை வளர்ப்போம். இனி வரும் தலைமுறையினரை நல்ல முறையில் வளர்ப்போம். தற்போது நிகழும் கொலை மற்றும் கொள்ளைகளை குறைப்போம் . அடுத்த தலைமுறை தங்களின் தற்காப்பிற்காக துப்பாக்கியை ஏந்தும் அவலத்தை தடுப்போம்.

பள்ளி கூடங்களின் தவறு:

தங்கள் பள்ளி 100 சதவிகிதம் தேர்ச்சி விகிதம் பெற குழந்தைகளை படி படி என்று மட்டும் தொல்லை செய்து அவர்களிடத்தில் நற் பண்புகளை விதைக்க தவறி விட்டீர்கள். இன்றைய மாணவர்கள் , நம் நாட்டின் அடுத்த தலைமுறைகள் என்பதை மறந்து விட்டு, அவர்களை மனப்பாடம் செய்யும் ஒரு கருவியை மட்டும் பார்க்கும் நீங்கள் நினைத்தால், நம் நாட்டில் இருக்கும் அணைத்து மாணவர்களையும் நல்ல மனிதர்களாய், நேர்மை நிறைந்த மக்களாய், நல்ல விஞ்ஞானிகளாய் மாற்ற முடியும்.

படிப்பை மட்டும் கற்று தராமல் நம் மாணவர்களுக்கு நல்ல பழக்கங்களையும் , மனித நேயத்தையும் கற்று தர வேண்டும்.கல்வியை வைத்து காசு பார்க்க வேண்டும் என்கிற எண்ணம் கல்வி நிறுவனங்களிடம் இருந்து அகல வேண்டும்.

சினிமாக்காரர்களின் தவறு ?

வேலை வேட்டி இல்லாதவன் சினிமா எடுக்கிறான். அதை வேலைக்கு சென்று கஷ்டப்பட்டு சம்பாதிப்பவன் தனது சம்பாத்தியத்தை கொடுத்து பார்க்கிறான். எவனோ ஒருவன் வாழ்வதற்கு, நாம் நம் பணத்தை செலவு செய்கிறோம். rowdyism-ஐ heroism-மாய் மாற்றும் மாயை சினிமாவிற்கு மட்டுமே உள்ளது. நம் குழந்தைகளின் மூளைக்குள் செல்லும் இந்த மாயை இந்த உலகில் இது தான் சரி என்று அவர்களை நம்ப வைக்கிறது.

குழந்தைகளை சினிமாவிற்கு அழைத்து செல்வதை நிறுத்துங்கள் பெற்றோர்களே. குழந்தைகளை குழந்தைகைளாய் வளருங்கள். நல்ல சமுதாயம் வளர முயற்சிப்போம்.

அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது, அதனினும் அரிது கூன் குருடு செவிடு நீங்கி பிறத்தல் அரிது.

இப்படி பிறகும் நாம் நம் மனிதத்தை இழந்து வாழ்ந்து வருகிறோம். கொலை, கொள்ளைகளை ஒழிக்க வேண்டும். நேர்மையாகவும் உழைப்பாளியாகவும் இருத்தல் வேண்டும். நம் பிள்ளைகளை நல்ல முறையில் வளர்க்க வேண்டும். தவறு செய்தால் தண்டிக்க வேண்டும். நல்ல சமுதாயத்தை உருவாக்க வேண்டும். ஒன்றிணைவோம் நம் தமிழகத்தை உயர்த்துவோம்.

- லாவண்யா

English summary
Our reader Lawanya has narrated about how to save our kids from the social ills.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X