For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

5 மார்க் வாங்கிய அண்ணா பல்கலை. மாணவருக்கு 77 மதிப்பெண்.. மறுமதிப்பீட்டு கோல்மாலை பாருங்க

By Veera Kumar
Google Oneindia Tamil News

Recommended Video

    5 மதிப்பெண் பெற்ற ஒரு மாணவருக்கு மறு மதிப்பீட்டின்போது 77 மதிப்பெண் வழங்கப்பட்ட சம்பவம் - வீடியோ

    சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தில், 5 மதிப்பெண் பெற்ற ஒரு மாணவருக்கு மறு மதிப்பீட்டின்போது 77 மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது. இதுபோன்ற ஆதாரங்கள்தான் லஞ்ச ஒழிப்புத்துறையின் அதிரடி நடவடிக்ைககளுக்கு காரணம் என்று கூறப்புடகிறது.

    2017ம் ஆண்டு ஏப்ரல்/மே மாதத்தில் தேர்வு எழுதிய ஒரு மாணவரின் மதிப்பெண் பட்டியலை லஞ்ச ஒழிப்புத்துறை கைப்பற்றியுள்ளது. இதுபோல பல மாதிரி விடைத்தாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

    அதில் ஒரு மாணவர் 5 மதிப்பெண்களை பெற்றுவிட்டு மறுதிருத்தத்திற்கு விண்ணப்பித்துள்ளார்.

    15 மதிப்பெண் வித்தியாசமே அதிகம்

    15 மதிப்பெண் வித்தியாசமே அதிகம்

    மறுதிருத்தத்தின் போது, அவருக்கு 45 மதிப்பெண்கள் கொடுக்கப்படுகிறது. அண்ணா பல்கலைக்கழக மறுதிருத்த விதிமுறைப்படி, ஒரிஜினல் மதிப்பெண்ணுக்கும், மறுதிருத்தத்திற்கு பிறகான மதிப்பெண்ணுக்கும் நடுவே 15 மதிப்பெண்களுக்கு மேல் வித்தியாசம் இருந்தால், மீண்டும் ஒரு மறுதிருத்தம் செய்யப்பட வேண்டும்.

    77 மார்க்காம்

    77 மார்க்காம்

    இந்த விஷயத்தில் 40 மதிப்பெண்கள் கூடுதலாக கிடைத்துள்ளது என்பதால் மறுதிருத்தம் நடக்கிறது. அங்குதான் அடுத்த கோல்மால் நடக்கிறது. மறுதிருத்தத்தை மறுதிருத்தம் செய்தபோது, 5 மதிப்பெண் பெற்ற அந்த மாணவருக்கு 77 மதிப்பெண்கள் வழங்கப்படுகிறதாம். இதன்பிறகு இதில் எது பொதுவான மதிப்பெண் என கணக்கிடப்பட்டு மாணவருக்கு வழங்கப்பட்டதாம்.

    பல விஷயங்கள்

    பல விஷயங்கள்

    இது ஒரு சம்பவம்தான். இதுபோல ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு மடுவிற்கும், மலைக்குமான வித்தியாசத்தில், மதிப்பெண்கள் வாரி வழங்கப்பட்டுள்ளன. தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி உமா இதன் பின்னணியில் இருந்துள்ளது தெரியவந்துள்ளது.

    ஊழல் சாம்ராஜ்யம்

    ஊழல் சாம்ராஜ்யம்

    உமாவுக்கு பல பேராசிரியர்கள் உடந்தையாக இருந்துள்ளனர். பணத்தை வாங்குவது ஒருவர், சப்ளை செய்வது ஒருவர், பேராசிரியர்களை அதிக மதிப்பெண் வழங்க சொல்லி அழுத்தம் கொடுப்பது மற்றொருவர் என இது பகுதி பகுதியாக பிரிக்கப்பட்ட ஊழல் சாம்ராஜ்யம். இதைத்தான் அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா, பெரிய நெட்வொர்க்கே இயங்கிக்கொண்டிருப்பதை கண்டுபிடித்துள்ளதாக நேற்று குறிப்பிட்டார்.

    English summary
    How a student get 77 marks after re evalution, in Anna university? this is where bribe takes its own action.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X