For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நூற்றுக்கணக்கானோர் குவிந்து கோரிக்கைகளுடன் மனு, போராட்டம்.. பரபரப்பான கரூர் கலெக்டர் அலுவலகம்!

Google Oneindia Tamil News

கரூர்: கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று நூற்றுக்கணக்கானோர் குவிந்து பல்வேறு விதமான கோரிக்கைகளுடன் மனு அளித்தும், போராட்டம் நடத்தியதால் பரபரப்பாக காணப்பட்டது கலெக்டர் அலுவலகம்.

கரூர் அருகேயுள்ள கொக்கம்பட்டி பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ள சுடுகாட்டிற்கு செல்லும் பாதையில் உள்ள ஆக்கிரம்பை மீட்டு தரக்கோரி கரூர் மாவட்ட கலெக்டரிடம் பொதுமக்கள் மனு அளித்தினார்கள்.

கரூர் மாவட்டம் தாந்தோணிமலை ஒன்றியத்திற்குட்பட்ட ஊத்துகரைபட்டி மற்றும் கொக்கம்பட்டியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இக்கிராம மக்களுக்கு என்று அரசு சார்பில் வழங்கப்பட்ட சுடுகாட்டுப் பகுதியில் தலைமுறை, தலைமுறையாக பயன்படுத்தி வருகின்றனர்.

தற்போது இவர்கள் பயன்படுத்திய சுடுகாட்டிற்க்கு செல்லும் பாதை தனியாருக்கு செந்தமானது எனக்கோரி அவர்கள் வேலி போட்டு தடுப்பு ஏற்படுத்தி விட்டனர். இது குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் கடந்த 2012-ம் ஆண்டு முதல் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக்கோரி ஆக்கிராம பொதுமக்கள் சுமார் 200-க்கும் மேற்படடோர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர்.

Hundreds siege Karur collectorate

உள்ளே செல்ல முயன்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி 5 பேரை மட்டும் கலெக்டரை சந்திக்க அனுமதியளித்தனர். இதனையடுத்து 5 நபர்கள் மட்டும் மாவட்ட கலெக்டர் ஜெயந்தியிடம் கோரிக்கை மனுவினை அளித்தனர். இது குறித்து கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததன் பெயரில் அனைவரும் திரும்பிச்சென்றனர்.

ஏலச்சீட்டு மோசடி - மருமகன் கொலை - மீதக் குடும்பத்திற்குப் பாதுகாப்பு கோரிக்கை!

இதேபோல, கரூர் அருகே ஏலச்சீட்டு நடத்தி மோசடி செய்து மருமகனை கொலை செய்தும், மீதமுள்ள கும்பத்தாருக்கும் கொலை மிரட்டல் விடுத்த விவகாரத்தில் பல முறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காதை கண்டித்து மாவட்ட அலுவலக வளாகம் முன்பு தனி நபர் ஒருவர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுப்பட்டார்.

கரூர் மாவட்டம் தோகைமலை ஒன்றியத்திற்கு உட்பட்ட வடசேரியை சேர்ந்தவர் சுப்ரமணியன், இவருக்கு 6மகள்களும், விஜய் அனந்த் என்ற மருமகனும் உள்ளனர். இந்நிலையில் கடந்த ஆண்டு இதே பகுதியில் நாவல்நாயக்கன்பட்டியை சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வெள்ளைசாமி. அவரது மகன் கேசவன் இணைந்து நடத்திய ஏலசீட்டில் சேர்த்து மாதம், மாதம் பணம் கட்டி வந்துள்ளார்.

ஏலச்சீட்டு முறைகேடு விவகாரத்தில் மருமகன் விஜய் ஆனந்தை கடந்த 5.10.2013-ல் கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டுள்ளனர். இது தொடர்பாக தோகைமலை காவல்நிலைத்தில் வழக்கு பதிவு செய்து எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

இது தொடர்பாக பொருளாதார குற்றபிரிவு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் பலமுறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாததால் கடந்த ஜூன் 26-ல் சுப்ரமணி தனது குடும்பத்தாருடன் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உண்ணாவிரத போராட்த்தில் ஈடுபட்டார்.

மேலும் இது தொடர்பாக சுப்ரமணி தமிழக முதல்வரின் தனி பிரிவுக்கும் மனு செய்துள்ளார். ஆனால் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாததால் மீண்டும் சுப்பிரமணி தனியாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு பின்னர் மாவட்ட கலெக்டர் ஜெயந்தியிடம் மனு அளிததார்.

English summary
Hundreds of peope sieged the Karur collectorate with various demands.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X