For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

"நிற்காமல்" ஓடும் பஸ்கள்.. கொந்தளித்த கிராமப்புற மாணவர்கள்.. சாலை மறியலால் பரபரப்பு

Google Oneindia Tamil News

நெல்லை: நெல்லை அருகே பஸ் வசதி இல்லாததால் நூற்றுக்கணக்கான கிராமப்புற மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாளையங்கோட்டை அருகே உள்ள செங்குளம், உத்தமபாணடியபுரம், பாறைகுளம், தெற்கு அரியகுளம் ஆகிய பகுதிகளை சேர்ந்த சுமார் 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பாளையில் உளள பல்வேறு பள்ளிகளில் படித்து வருகின்றனர். இவர்கள் உத்தமபாண்டியபுரம் விலக்கு அருகே திருச்செந்தூர் ரோட்டில் உள்ள தனியார் பள்ளி பஸ் நிறுத்தத்தில் இருந்து பஸ ஏறுவர்.

சில நேரங்களில் கூட்டம் அதிகமாக இருந்தால் பஸ்கள் நிற்காமல் சென்று விடுகிறது இதனால் மாணவ, மாணவிகள பள்ளிக்கு செல்ல மிகுந்த சிரமப்படுகின்றனர். இந்த நிலையில் மாலையில் சுமார் 50 மாணவ்ர்கள் ப்ஸ்சுக்காக காத்திருந்தனர். ஆனால் பஸ்கள் நிற்கவில்லை. இதனால ஆத்திரம் அடைந்த மாணவர்கள் திடீரென ரோட்டில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் ரோட்டில் வாகனஙகள் அணிவகுத்து நின்றன. தகவல் அறிந்த தாலுகா போலீசார் விரைந்த வந்து மாணவர்களிடம் பேச்சுவார்ததை நடத்தினர். உத்தமபாண்டியன்குளம், பாறைகுளம் பகுதி மாணவ, மாணவிகள் பள்ளி செல்வதற்கு காலை, மாலை வேளைகளில் சிறப்பு பஸ்கள் இயக்க வேண்டும், அனைத்து பஸ்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அதற்கு ஏற்பாடு செய்வதாக போலீசார் உறுதியளித்தனர். இதையடுத்து மாணவர்கள் கலைந்து சென்றனர்.

English summary
Hundreds of students indulged in road roko against the govt buses which are not halting in bus stops during the peak hours in Nellai.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X