For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஸ்டெர்லைட்: 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று தூத்துக்குடி மக்கள் உண்ணாவிரதம்

ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக 7 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி தூத்துக்குடி மக்கள் இன்று உண்ணாவிரத போராட்டத்தை நடத்தினர்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    இன்று தூத்துக்குடி மக்கள் உண்ணாவிரதம்-வீடியோ

    தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான 7 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி தூத்துக்குடியில் இன்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

    தூத்துக்குடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலையால் புற்றுநோய் ஏற்படுவதாக மக்கள் புகார் கூறுகின்றனர். மேலும் நிலத்தடி பாதிக்கப்படுவதுடன் விவசாயமும் செழிக்கவில்லை.

    Hunger strike in Tuticorin for Anti Sterlite industry

    இதனால் ஸ்டெர்லைட் ஆலையை மூடுமாறு தூத்துக்குடியில் குமரெட்டியாபுரம் மக்கள் கடந்த 83 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கம் சார்பில் 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடி வி.வி.டி. சிக்னல் அருகே இன்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது.

    ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும், ஸ்டெர்லைட் ஆலையால் புற்றுநோய் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு 20 லட்சம் ருபாய் நிவாரண நிதி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.

    Hunger strike in Tuticorin for Anti Sterlite industry

    இந்த போராட்டத்தில் தூத்துக்குடி நகர்பகுதி மற்றும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கத்தினர், பொதுமக்கள், நடிகர் மன்சூர் அலிகான் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    English summary
    Today's hunger strike held in Tuticorin on the basis of the 7-demands on behalf of the anti-Sterlite protest movement.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X