For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆண்டாள் தாயார் கூறும் வரை வைரமுத்துவுக்கு எதிரான உண்ணாவிரதம் தொடரும்.. ஜீயர் உறுதி!

ஆண்டாள் தாயர் கூறும் வரை வைரமுத்துவுக்கு எதிரான தனது உண்ணாவிரதம் தொடரும் என ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    ஆண்டாள் தாயார் கூறும் வரை வைரமுத்துவுக்கு எதிரான உண்ணாவிரதம் தொடரும்- வீடியோ

    சென்னை: ஆண்டாள் தாயர் கூறும் வரை வைரமுத்துவுக்கு எதிரான தனது உண்ணாவிரதம் தொடரும் என ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் தெரிவித்துள்ளார்.

    கவிஞர் வைரமுத்து ஆண்டாள் குறித்து கூறிய கருத்து பெரும் சர்ச்சையானது. இதனால் வைரமுத்துவுக்கு எதிராக தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்றது.

    வைரமுத்து மீது போலீஸ் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தனது கருத்து திரித்து கூறப்பட்டதாக கூறி வருத்தம் தெரிவித்தார் வைரமுத்து.

    ஆண்டாளின் குழந்தைதான்

    ஆண்டாளின் குழந்தைதான்

    இந்நிலையில் வைரமுத்து மன்னிப்பு கேட்க வலியுறுத்தி ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜர் இன்று முதல் மீண்டும் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் வைரமுத்துவும் ஆண்டாளின் குழந்தைதான் என்றார்.

    ஆண்டாள் கூறும் வரை

    ஆண்டாள் கூறும் வரை

    வைரமுத்து மன்னிப்பு கேட்கும் வரை உண்ணாவிரதம் தொடரும் என்றும் ஆண்டாள் தாயார் கூறும் வரை வைரமுத்துவுக்கு எதிரான உண்ணாவிரதம் நீடிக்கும் என்றும் ஜீயர் தெரிவித்தார்.

    ஆதரவு தருவார்கள்

    ஆதரவு தருவார்கள்

    தனது உண்ணாவிரதத்துக்காக யாரிடமும் ஆதரவு கேட்கவில்லை என்ற அவர், ஆதரவு கொடுப்பவர்கள் கொடுக்கலாம் என்றார். மேலும் அனைவரும் ஆதரவு தருவார்கள் என்றும் அவர் கூறினார்.

    ஆன்மிக போராட்டம்

    ஆன்மிக போராட்டம்

    இது ஒரு ஆன்மிக போராட்டம் என்றும் ஜீயர் கூறினார். மேலும் யார் மனதையும் புண்படுத்தக்கூடிய போராட்டம் இல்லை என்றும் அவர் கூறினார்.

    பாதியிலேயே முடித்தார்

    பாதியிலேயே முடித்தார்

    கடந்த ஜனவரி 17ஆம் தேதி முதல் 2 நாட்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டிருந்தார் ஜீயர். ஆனால் திடீரென தனது உண்ணாவிரதத்தை பாதியிலேயே முடித்துக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Srivilliputhur Jeeyar begins his hunger strike. Poet Vairamuthu talk about Andal became controversy. Jeeyar urges Vairamuthu to apology for his talk. He has said that hunger strike will continue till Andal says to end.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X