For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பெரிய பிராட்டி கொடுத்து வைத்தவர்.. அசத்திய ஆசைத்தம்பி.. மாமண்டூரில் ஒரு "தாஜ்மஹால்"!

மனைவிக்காக சிலை வடித்துள்ளார் ஒரு கணவர்.

Google Oneindia Tamil News

Recommended Video

    அசத்திய ஆசைத்தம்பி...மாமண்டூரில் ஒரு தாஜ்மஹால்!- வீடியோ

    செங்கல்பட்டு: கருத்து வேறுபாடு, ஒற்றுமையின்மை, காதைக் கிழிக்கிற சண்டைகள் நாட்டில் கணவன்-மனைவியிடையே ஏராளம். அதில் யாருக்கு வெற்றி தோல்வி என்பதெல்லாம் கிடையாது. ஒரே இலக்கு சண்டை மட்டும்தான். இந்த சண்டைகள்தான் அன்பை கொஞ்சம் கொஞ்சமாக சுரண்டி தேய்த்து எடுத்து விடுகின்றன. இன்னும் சொல்லப்போனால் அலுவலகங்களில் நண்பர்களிடத்தில் இருக்கும் புரிதலும் நிம்மதியும் கூட வீட்டுக்குள் பலருக்கு கிடைப்பதில்லை.

    மனைவியின் மீதான பாசம் என்பதும், கணவனின் மீதான பாசம் ஓரிரு நாளிலோ, ஓரிரு மாதங்களிலோ வராது. அது நாளடைவில்தான் தோன்றி வளரும். இருவருக்குமிடையேயான அணுகுமுறை, குடும்ப சிக்கல்களை பார்க்கும் பார்வை, தன்மீது கொண்டிருக்கும் அக்கறை, தன்னை சார்ந்த உற்றார் உறவினர்கள் மீதான அக்கறையும், கரிசனமும் போன்றவைதான் கணவன்-மனைவி பாசத்தை தீர்மானிக்கும்.

    அப்போது கணவன்-மனைவிக்கு இடையேயான காதலானது காலப்போக்கில் பக்குவமடைந்து முழுமைபெற்ற பிறகு உருவாகி வளர்வதுதான் பாசம். இந்த பாசம் 80 அல்லது 90 வயதை கடந்தாலும் கூட கணவன்-மனைவி இருவரையும் கட்டிப் போடும் சக்தி கொண்டது. அப்படிப்பட்ட மனைவியின் மீதான பாசத்தையும் அன்பையும் இறுதிவரை அள்ளி கொடுத்த கணவன்கள் ஏராளம். அதில் ஒருவர்தான் ஆசைத்தம்பி. அவரை பற்றிய சம்பவம்தான் இது.

     சொந்த வீடு

    சொந்த வீடு

    செங்கல்பட்டு பகுதியில் உள்ள மாமண்டூர் என்னும் இடத்தில் வசித்து வருகிறார். இவர் கடந்த 1977-ம் ஆண்டு தனது மாமா பெண்ணையே கல்யாணம் செய்து கொண்டார். அவரது பெயர் பெரியபிராட்டிஅம்மாள். இவர்களுக்கு இரண்டு பெண்குழந்தைகளும் பிறந்தனர். திருமணமாகி சில நாட்களில் சரியான வேலை எதுவும் ஆசைத்தம்பிக்கு இல்லை என்பதால், வேலை தேடி சென்னை சென்றனர். அங்கு ஒரு மளிகை நடத்தினர். கடுமையாக உழைத்ததால் அதிக லாபம் சம்பாதித்த ஆசைத்தம்பி தனது ஊரில் ஒரு வீட்டையும் வாங்கினார். மளிகை கடையின் வளர்ச்சிக்கு பெரியபிராட்டி அம்மாள்தான் துணையாக இருந்தார். எப்போதாவது ஏதாவது இடர்பாடுகள், தோல்விகள், வருத்தங்கள், ஏமாற்றங்கள் ஏற்படும்போதெல்லாம் ஆசைத்தம்பிக்கு பக்கபலமாக இருந்துள்ளார்.

     காலன் விட்டுவைக்கவில்லை

    காலன் விட்டுவைக்கவில்லை

    மனைவியின் அன்பும், ஆலோசனையும், நம்பிக்கை வார்த்தைகளும் ஆசைத்தம்பிக்கு நிறைய சமயங்களில் பலமாக இருந்துள்ளன. இந்நிலையில் சிறிது காலத்திற்கு முன்னர் பெரியபிராட்டி அம்மாளை புற்றுநோய் தாக்கியது. இதனை கொஞ்சமும் எதிர்பார்க்காத ஆசைத்தம்பி இடிந்துபோனார். ஆனால் படுக்கையிலும் மனைவி கணவனை அழைத்து, "எப்பவும் நான் உங்களுடன்தான் இருப்பேன். ஏன் பயப்படுகிறீர்கள்?" என்றார். அப்படி அவர் சொன்னாலும் காலன் விட்டுவைக்கவில்லை. சிறிது நாளிலேயே பெரியபிராட்டியை கூடவே கூட்டிக் கொண்டு போய்விட்டான்.

     பூரித்துபோன ஆசைத்தம்பி

    பூரித்துபோன ஆசைத்தம்பி

    கதறி அழுதார் ஆசைத்தம்பி. தனிமையில், வெறுமையில் மனைவியை நினைத்து தவித்தார். மனைவி மரணமடைந்து 16-நாள் காரியம் நடத்த முடிவானது. அப்போது தனது மனைவிக்கு ஒரு சிலை செய்ய வேண்டும் என்று விரும்பினார் ஆசைத்தம்பி. அதற்காக ஒரு சிற்பியை வரவழைத்து அதற்கான வேலையையும் தொடங்கினார். பெரியபிராட்டி அம்மாளின் சிலை தயாரானது. மனைவியின் சிலை கண்டு பூரித்து போனார் ஆசைத்தம்பி. அந்த சிலையை தான் மட்டும் காணாமல், அதற்கு திறப்பு விழா ஒன்றிற்கு ஏற்பாடு ஊரையே வரவழைத்தார்.

     ஆசைத்தம்பியின் தாஜ்மஹால்

    ஆசைத்தம்பியின் தாஜ்மஹால்

    தினந்தோறும் மனைவியின் சிலையிடம் ஒரு மணிநேரமாவது பேசிக் கொண்டிருக்கிறாராம் ஆசைத்தம்பி. சிலருக்கு இது பைத்தியக்காரத்தனமாகவும், தேவையில்லாததாக தோன்றும். சிலருக்கு இது உணர்வுபூர்வமாக தெரியும். எப்படிப்பார்த்தாலும் அதில் தென்படுவது பாசம்தான். அது ஷாஜகான் கட்டிய தாஜ்மஹால் ஆகட்டும், ஆசைத்தம்பி வடித்து வைத்த சிலையாகட்டும்.. எல்லாமே அன்புதான்.

    English summary
    Husband creats a statue for his wife near Chengalpat
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X