For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆத்திரம் மண்டைக்கேறி ஒரு வினாடி செய்யும் தவறு... ஆயுசுக்கும் நின்றுவிடுகிறது!

மனைவியை ஹெல்மெட்டால் தாக்கி கொன்ற கணவன் போலீசில் சரணடைந்துள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    கோபத்தில் மனைவியை கொன்றுவிட்டு போலீசில் சரணடைந்த கணவர்- வீடியோ

    திருவள்ளூர்: ஆத்திரம் மண்டைக்கேறி அந்த ஒரு வினாடி செய்யும் தவறுதான் ஆயுசுக்கும் நின்றுவிடுகிறது. மனைவி என்றும் பாராமல் பெண் என்றும் பாராமல், கொடூரமாக கொலை செய்துவிட்டு கடைசியில் போலீசாரிடம் சரண் அடைந்துள்ளார் அவரது கணவன்.

    திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே ஈகுவார்பாளையத்தை சேர்ந்தவர் சுதாகர். இவர் விமலா என்பவரை திருமணம் செய்து கொண்டார். சுதாகர் ஒரு டாஸ்மாக் ஊழியர். கடையில் வெறும் ஊழியராக மட்டும் இருந்திருந்தால் பரவாயில்லையே. ஆனால் சுதாகர் தினந்தோறும் அளவுக்கதிமாக தண்ணி அடித்து வந்திருக்கிறார்.

    கோர்ட்டில் விண்ணப்பித்தனர்

    கோர்ட்டில் விண்ணப்பித்தனர்

    அதனால் கல்யாணம் முடிந்து 6 ஆண்டுகள் ஆனாலும் கணவன்-மனைவியிடம் ஒற்றுமை இல்லை. குடித்துவிட்டு வீட்டுக்கு வரும்போதெல்லாம் பிரச்சனைதான். தகராறுதான். இவர்களுக்கு குழந்தை கிடையாது. அதனால் அதுவும் மோதலாக வெடித்தது. குழந்தை ஏன் பிறக்கவில்லை, அது சம்பந்தமாக எந்தவித மருத்துவ நடவடிக்கையும் இருவரும் எடுக்காமல், விவாகரத்து செய்து கொள்ளலாம் என முடிவெடுத்து கோர்ட்டுக்கு சென்று விண்ணப்பித்துவிட்டனர்.

    மீண்டும் சண்டை

    மீண்டும் சண்டை

    இவர்களின் தகராறை கண்ட பாதிரிவேடு போலீசாரும், கோர்ட்டில் விவாகரத்து கிடைக்கும்வரை மனைவிக்கு மாதந்தோறும் 6 ஆயிரம் ரூபாய் ஜீவனாம்சமாக தருமாறு சுதாகருக்கு அறிவுரை கூறினர். முதல் 4 மாதம் ஒழுங்காக மனைவிக்கு பணம் கொடுத்தார் சுதாகர். அடுத்த 2 மாதம் தராமல் விட்டுவிட்டார். இதனால் சண்டை மீண்டும் ஆரம்பமானது.

    ரத்தம் கொட்டியது

    ரத்தம் கொட்டியது

    இதில் பொறுமையிழந்த சுதாகர், கோபம் கட்டுக்கடங்காமல் போய், ஆக்சாபிளேடை எடுத்து விமலாவின் கழுத்தை சரமாரியாக அறுத்தார். அப்போதும் வெறி அடங்காமல், அங்கிருந்த ஹெல்மெட்டை எடுத்து தலையில் கன்னாபின்னாவென்று அடித்தார். இதில் விமலாவுக்கு கழுத்திலும், மண்டை பிளந்தும் ரத்தம் கொட்டியது. அந்த ரத்த வெள்ளத்திலேயே அங்கேயே சுருண்டு விழுந்து உயிரிழந்தார் விமலா.
    இதனை கண்ட சுதாகர், நேராக காவல்நிலையம் சென்று சரணடைந்துவிட்டார்.

    கொலை வரை சென்ற கோபம்

    கொலை வரை சென்ற கோபம்

    இதனை கண்ட சுதாகர், நேராக காவல்நிலையம் சென்று சரணடைந்துவிட்டார். கொஞ்சம் பொறுமையாக இருந்திருந்தால் எளிதாகவே சுதாகருக்கு விவாகரத்து கிடைத்திருக்கும். கோபம் ஒரு கொலை வரை சென்றுவிட்டது. மதுப்பழக்கம் குடும்ப வாழ்க்கையையே நாசமாக்கிவிட்டது. இப்போது கம்பி எண்ணிக் கொண்டிருக்கும் சுதாகர் திருந்தியே வந்தாலும் என்ன பயன்?

    English summary
    Husband kills wife near Kummudipoondi
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X