For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆம்பூரில் மனைவியுடன் கள்ளக்காதல்.. சொல்லியும் கேட்காததால் ஆத்திரம்.. இளைஞருக்கு தீ வைத்த கணவன்

Google Oneindia Tamil News

ஆம்பூர்: ஆம்பூர் அருகே மனைவியுடன் தகாத உறவில் ஈடுபட்டதாக ஒருவரை அவரது கணவன் பெட்ரோல் ஊற்றி எரித்த நிலையில் அவர் 90 சதவீத தீக்காயங்களுடன் வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த தேவலாபுரம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி அபிராமி. இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் என்பவர் மணிகண்டனின் மனைவியுடன் தகாத உறவில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இரவு நேரத்தில்.. கவனமாக இருங்கள்.. பேருந்து ஓட்டுனர்களுக்கு பறந்த மெசேஜ்.. தமிழக அரசு உத்தரவு!இரவு நேரத்தில்.. கவனமாக இருங்கள்.. பேருந்து ஓட்டுனர்களுக்கு பறந்த மெசேஜ்.. தமிழக அரசு உத்தரவு!

பெட்ரோல் ஊற்றி தீ

பெட்ரோல் ஊற்றி தீ

இந்நிலையில் நேற்று இரவு இதுகுறித்து மணிகண்டனுக்கும் ராஜேஷுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த மணிகண்டன், ராஜேஷ் வீட்டிற்கு சென்று அவர் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்துள்ளார்.

ராஜேஷை மீட்ட அக்கம்பக்கத்தினர்

ராஜேஷை மீட்ட அக்கம்பக்கத்தினர்

இந்நிலையில் இதை கண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக ராஜேஷை மீட்டு சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அதற்குள் ராஜேஷ் உடல் முழுவதும் 90 சதவீதம் தீக்காயம் ஏற்பட்டது.

மருத்துவமனை

மருத்துவமனை

நிலையில் மேல் சிகிச்சைக்காக அவரை வேலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல மருத்துவர்கள் பரிந்துரைத்ததின் பேரில் அவர் வேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

ஆபத்தான நிலையில் ராஜேஷ்

ஆபத்தான நிலையில் ராஜேஷ்

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த உமராபாத் காவல்துறையினர் மணிகண்டனை கைது செய்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர். ராஜேஷுக்கு 90 சதவீதம் தீக்காயம் அடைந்ததால் அவர் ஆபத்தான நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

English summary
Husband sets fire on a youth who allegedly has illegal relationship with his wife in Ambur. police arrested and investigation going on.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X