காட்டுமன்னார்கோயில் அருகே பரிதாபம்.. இடி தாக்கி கணவன், மனைவி உயிரிழப்பு !
கடலூர்: காட்டுமன்னார்கோயில் அருகே இடி தாக்கி கணவன், மனைவி இருவர் உடல் கருகி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகே சோழத்தரம் பகுதியில் உள்ள புடையூர் குடிகாட்டை சேர்ந்தவர் முருகேசன் மகன் ராமலிங்கம்(48). விவசாயி. நேற்று மாலை இவரும் இவரது மனைவி அஞ்சாயாள் (40) ஆகிய இருவரும் அதே பகுதியில் உள்ள வயலில் மாடு மேய்ந்துக் கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென இடியுடன் பலத்த மழை பெய்தது. இதையடுத்து இருவரும் அருகில் உள்ள மரத்தில் கீழை ஒதுங்கிய போது இடி, மின்னல் தாக்கியதில் ராமலிங்கம் மற்றும் அவரது மனைவி அஞ்சாயாள் ஆகியோர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த சோழத்தரம் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டு உடல்களை கைப்பற்றி பிரேத பிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்ப வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications