For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அதிகாரிகளுக்கே தெரியும்.. அவர்களிடம் கேளுங்கள்.. வருமான வரி பற்றிய கேள்விக்கு ரஜினி சொன்ன பதில்!

வருமான வரி முறைகேடு தொடர்பான கேள்விக்கு, நடிகர் ரஜினிகாந்த், நான் நேர்மையாக வருமான வரி செலுத்துபவன், இது வருமான வரித்துறை அலுவலகத்துக்கே தெரியும் என்று பதில் அளித்துள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    சிஏஏ சட்டத்தால் முஸ்லீம்களுக்கு பாதிப்பு இல்லை - ரஜினி கருத்து

    சென்னை: வருமான வரி முறைகேடு தொடர்பான கேள்விக்கு, நடிகர் ரஜினிகாந்த், நான் நேர்மையாக வருமான வரி செலுத்துபவன். இது வருமான வரித்துறை அலுவலகத்துக்கே தெரியும் என்று பதில் அளித்துள்ளார்.

    நடிகர் ரஜினிகாந்த் மீதான வருமான வரி புகாரும், பின்பு அது வாபஸ் வாங்கப்பட்டதும் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 2002 முதல் 2005 வரை வாங்கிய வருமானத்திற்கு வரி கட்டவில்லை என்று ரஜினிக்கு எதிராக புகார் வைக்கப்பட்டுள்ளது. இதற்காக அவருக்கு வருமானவரித்துறை சார்பாக அபராதம் விதிக்கப்பட்டது.

    அதன்படி 2002 - 05ம் ஆண்டில் 66 லட்சத்து 21 ஆயிரம் அபராதம் செலுத்தி இருக்க வேண்டும். ஆனால் ரஜினி இதை செலுத்தவில்லை. இந்த நிலையில் ரஜினிக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கை வருமான வரித்துறை வாபஸ் வாங்கியது. ரஜினிக்கு 1 கோடி ரூபாய்க்கு குறைவாகவே அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதனால் ரஜினிக்கு எதிரான இந்த வழக்கையும் திரும்ப பெறுகிறோம் என்று வருமான வரித்துறை தெரிவித்தது .

    சிஏஏ சட்டத்தால் முஸ்லீம்களுக்கு பாதிப்பு இல்லை.. கட்சிகள் பீதி கிளப்புகின்றன.. ரஜினி சொல்கிறார்! சிஏஏ சட்டத்தால் முஸ்லீம்களுக்கு பாதிப்பு இல்லை.. கட்சிகள் பீதி கிளப்புகின்றன.. ரஜினி சொல்கிறார்!

    வரி விவரம்

    வரி விவரம்

    இந்த வருமான வரி விவகாரம் தொடர்பாக ரஜினிகாந்த் வருமான வரித்துறையிடம் பதில் அளித்துள்ளார். அங்கு அவர் தாக்கல் செய்துள்ள ஆவணத்தில், நான் சம்பாதித்த பணத்திற்கு வரி கட்டிவிட்டேன். இது நான் கடன் கொடுத்தது. அதிலும் நான் யாருக்கும் கடனை தொழிலாக கொடுக்கவில்லை. தெரிந்தவர்களுக்கு மட்டும் பணம் கொடுத்தேன். அதில் வட்டி வந்தது. இந்த வட்டிக்கு வரி கட்ட வேண்டிய அவசியம் கிடையாது.

    என்ன விளக்கம்

    என்ன விளக்கம்

    இதை நான் தொழிலாக செய்யாத காரணத்தால் வரி கட்டவேண்டிய அவசியம் கிடையாது. இதில் எனக்கு பலர் கடனை திரும்ப தரவில்லை. இதனால் எனக்கு 33 லட்சம் ரூபாய் வரை இழப்பு தான் ஏற்பட்டது. இதை தொழிலாக செய்யவில்லை. நண்பர்களுக்கு உதவியாக செய்தேன். அதனால் இதற்கு வரி கட்ட தேவையில்லை என்று ரஜினி குறிப்பிட்டுள்ளார். ரஜினியின் இந்த வரி முறைகேடு பெரிய சர்ச்சையானது.

    பதில் அளித்தார்

    பதில் அளித்தார்

    இந்த நிலையில் இதற்கு தற்போது ரஜினிகாந்த் சென்னையில் அளித்த பேட்டியில் விளக்கம் கொடுத்துள்ளார். அதில் நான் நேர்மையாக வருமான வரி செலுத்துபவன். இது வருமான வரித்துறை அலுவலகத்துக்கே தெரியும். இதை நீங்கள் வருமான வரி அதிகாரிகளிடம் கூட கேட்டு தெரிந்து கொள்ளலாம். சட்டவிரோதமாக எந்த செயலும் செய்யவில்லை, என்று நடிகர் ரஜினிகாந்த குறிப்பிட்டு இருக்கிறார்.

    ரஜினி

    ரஜினி

    முதலில் இந்த கேள்வியை கேட்டதும் ரஜினியின் முகம் கோபமாக மாறியது. இது தொடர்பான மற்ற கேள்விகளுக்கு ரஜினிகாந்த் பதில் அளிக்க மறுத்துவிட்டார். அதேபோல் ரஜினி வட்டிக்கு விட்டது தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளிக்கவில்லை. வரி காட்டாதது குறித்த கேள்விக்கு மட்டுமே ரஜினி பதில் அளித்தார். வட்டி தொடர்பான கேள்விக்கு எதுவும் சொல்லாமல், வேறு விஷயங்கள் குறித்து பேச தொடங்கிவிட்டார்.

    English summary
    I am a good Taxpayer, Officials Know about me says Rajini Kanth on the Income tax case.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X