For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உதவி இயக்குநர் காந்தி தற்கொலைக்கு நான் காரணமல்ல.. நடிகை நிலானி கமிஷனர் அலுவலத்தில் பரபர தகவல்!

உதவி இயக்குநர் காந்தி லலித்குமார் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டதற்கு நான் காரணமல்ல என டிவி நடிகை நிலானி தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: உதவி இயக்குநர் காந்தி லலித்குமார் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டதற்கு நான் காரணமல்ல என டிவி நடிகை நிலானி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி போராட்டத்தின் போது நடிகை நிலானி போலீசாரை அவதூறாக விமர்சித்து வீடியோ வெளியிட்டிருந்தார். இதன்மூலம் பிரபலமானார் நிலானி.

இதைத்தொடர்ந்து அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனால் கைதுக்கு பயந்து ஒரு மாதம் குன்னூரில் ஒரு மாதத்திற்கும் மேலாக தலைமறைவாக இருந்தார் நிலானி.

காந்தி மீது புகார்

காந்தி மீது புகார்

பின்னர் கைது செய்யப்பட்ட அவர் ஜாமீனில் வெளிவந்தார். இந்நிலையில் உதவி இயக்குநர் காந்தி லலித் குமார் தன்னை திருமணம் செய்துகொள்ள வற்புறுத்துவதாக கூறி சென்னை மயிலாப்பூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார் நிலானி.

தீக்குளித்து தற்கொலை

தீக்குளித்து தற்கொலை

இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்னை கேகே நகர் அருகே தீக்குளித்தார். சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கமிஷனர் அலுவலகத்தில் புகார்

கமிஷனர் அலுவலகத்தில் புகார்

இதைத்தொடர்ந்து நிலானியும் காந்தியும் நெருக்கமாக இருக்கும் போட்டோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் நிலானி தலைமறைவாகிவிட்டதாக கூறப்பட்டது. இதைத்தொடர்ந்து நடிகை நிலானி இன்று சென்னை கமிஷனர் அலுவலகத்தில் மனு ஒன்றை அளித்தார்.

நான் காரணமல்ல

நான் காரணமல்ல

அதில் காதலன் காந்தி லலித்குமார் தற்கொலைக்கு நான் காரணமல்ல. அவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதற்கு நான் பொறுப்பல்ல.

குடிபழக்கத்திற்கு அடிமை

குடிபழக்கத்திற்கு அடிமை

காதலனான காந்தியை திருமணம் செய்ய முடிவு செய்திருந்தேன். ஆனால் காந்தி குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி என்னிடம் இருந்து அதிக பணம் வாங்கி செலவு செய்ததால் ஒதுங்கினேன்

நடவடிக்கை எடுக்கவேண்டும்

நடவடிக்கை எடுக்கவேண்டும்

நானும் காந்தியும் சேர்ந்திருப்பது போன்ற படங்களை வேண்டுமென்றே சமூகவலைதளங்களில் பரப்புகின்றனர். நாங்கள் ஒன்றாக இருக்கு படங்களை வெளியிட்டு அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு நடிகை நிலானி தனது மனுவில் தெரிவித்துள்ளார்.

English summary
TV actress Nilani complaints in Chennai Police commissioner office. She said I am not the reason for the suicide of Gandhi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X