For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பொட்டு சுரேஷ் கொலையில் நான் பலிகடா ஆக்கப்படுகிறேன்... அதிரடி அட்டாக் பாண்டி

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: மு.க. அழகிரி.... மு.க. ஸ்டாலின் இடையை பிரித்தாளும் சூழ்ச்சி செய்தவர் பொட்டு சுரேஷ்... என்ற பொட்டு சுரேஷ் கொலைக்கு முன்பே பேட்டி கொடுத்தவர் அட்டாக் பாண்டி. பொட்டு சுரேஷ் கொலை வழக்கில் தான் பலிகடா ஆக்கப்படுவதாக சமீபத்தில் வார இதழ் ஒன்றுக்கு பேட்டியளித்த அட்டாக் பாண்டி இப்போது மும்பையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

மு.க.அழகிரியின் நண்பராக இருந்தவர் பொட்டு சுரேஷ், கடந்த திமுக ஆட்சியின்போது அரசு வட்டாரங்களில் அதிகாரமிக்க நபராக வலம் வந்தவர். ‘தென் தமிழகத்தின் துணை முதல்வர்' என்று ஜெயலலிதாவினால் விமர்சிக்கப்பட்டவர். ஆட்சி மாறியதும், அடுத்தடுத்து பாய்ந்த வழக்குகள் காரணமாக குண்டர் சட்டத்தின் கீழ் சிறையிலடைக்கப்பட்டு பின்னர் வெளியே வந்தார்.

கடந்த 2013ம் ஆண்டு அழகிரியின் பிறந்த நாளையொட்டி அவரைச் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்த பொட்டு சுரேஷ் 31.1.2013 அன்று அழகிரி வீட்டருகே உள்ள சாலையிலேயே வெட்டிக் கொல்லப்பட்டார். அவரது உடலில் 37 வெட்டுக் காயங்கள் இருந்தன.

கதறிய அழகிரி

கதறிய அழகிரி

பொட்டு சுரேஷ் கொலை செய்யப்பட்டபோது, ‘‘என் வலதுகரத்தை இழந்துவிட்டேன்'' என்று மு.க.அழகிரி அழுதார். அந்தக் கொலை வழக்கில் அழகிரியின் இடதுகரமான அட்டாக் பாண்டியை போலீஸ் தேடியது. பொட்டு கொலை வழக்கில் ‘அட்டாக்' பாண்டியின் அக்காள் மகன் விஜயபாண்டி, கூட்டாளி ஆரோக்கிய பிரபு ஆகிய இருவருக்கும்தான் முக்கியத் தொடர்பு உண்டு என போலீஸ் சொல்லிவந்த நிலையில், திடீரென அவர்கள் சேலம் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

உறவினர்கள் கைது

உறவினர்கள் கைது

அட்டாக் பாண்டியை கொல்ல பொட்டு சுரேஷ் திட்டமிட்டார், ‘நாங்கள் முந்திக்கொண்டோம்' என அவர்கள் வாக்குமூலத்தில் சொல்லியிருந்தார்கள். ‘அட்டாக்' பாண்டியின் தனிப்பட்ட விரோதம்தான் கொலைக்குக் காரணம் என இதுவரை கருதி வருகிறது போலீஸ். 10 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்திய போலீஸார், உறவினர்கள் மீது வழக்குகள் போட்டு சொத்துகள், வங்கிக் கணக்குகளை முடக்கம் செய்தனர்.

பரபரப்பு பேட்டி

பரபரப்பு பேட்டி

நீதிமன்றத்தால் தேடப்படும் குற்றவாளி என ஊரெங்கும் அறிவிப்பு போஸ்டர்கள் ஒட்டியது போலீஸ். கொல்கத்தாவில் இருக்கிறார், மும்பையில் இருக்கிறார் என்று அந்தமான் தப்பிவிட்டார் என்று செய்திகள் வெளிவந்த நிலையில் இரண்டரை ஆண்டுகளுக்குப்பின்னர் கொலைக்கான காரணத்தை வார இதழ் பேட்டி ஒன்றில் கூறியிருந்தார் அட்டாக் பாண்டி.

விசாரிக்காதது ஏன்?

விசாரிக்காதது ஏன்?

குற்றவாளிகள் விஜயபாண்டி, ஆரோக்கிய பிரபு ஆகியோர் சேலம் கோர்ட்டில் சரண் அடைந்த பிறகு அவர்கள் இருவரையும் மதுரை கோர்ட்டில் மனு போட்டு போலீஸார் கஸ்டடியில் எடுத்தார்கள். மதுரை அண்ணா நகர் போலீஸ் ஸ்டேஷனில் வைத்து இரண்டு பேரையும் விசாரித்தார்கள். அப்போது முக்கிய நபரைப் பற்றி இருவரும் சொல்லியுள்ளனர். மேலிட அழுத்தம் காரணமாக அந்த நபரை விசாரணைக்கு அழைத்து வந்த உடனடியாக விடுவித்து விட்டனர்.

நாங்கள் பலிகடா

நாங்கள் பலிகடா

விஜயபாண்டி, ஆரோக்கிய பிரபு ஸ்டேட்மென்ட்டில் அந்த நபரின் பெயர் இருந்தும் அவர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. இது நடந்தது உண்மையா என விசாரியுங்கள். குற்றத்தில் யார் யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறது என்பது உலகத்துக்குத் தெரிய வேண்டுமா, இல்லையா? இதில் நாங்கள் பலிகடா ஆக்கப்படுகிறோம். அதனால்தான் உண்மையை வெளிப்படுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

பொட்டு சுரேஷ் டபுள் கேம்

பொட்டு சுரேஷ் டபுள் கேம்

நான் அப்போது மதுரையிலேயே இல்லை. பொட்டு சுரேஷ் இறப்பதற்கு முன்பே அங்கிருந்து வந்துவிட்டேன். சென்னையில் இருந்தபோதுதான் பேட்டி கொடுத்தேன். (அந்த பேட்டியில்தான் அழகிரி ஸ்டாலின் இடையே பிரிவினை செய்கிறார் பொட்டு சுரேஷ் என்று கூறியிருந்தார் அட்டாக் பாண்டி. ஆளும்கட்சியில் நடப்பதை திமுகவிலும், திமுகவில் நடப்பதை ஆளும் கட்சிக்கும் சொல்லி டபுள் கேம் ஆடுகிறார் பொட்டு சுரேஷ் என்று பரபரப்பு கிளப்பினார்). இந்த பேட்டி வெளியான சில வாரங்களிலேயே பொட்டு சுரேஷ் படுகொலை செய்யப்பட்டார்.

கொலைக்கு யார் காரணம்

கொலைக்கு யார் காரணம்

பொட்டு சுரேஷ் கொலை சம்பவத்துக்குப் பல பேர் காரணமாக இருக்கிறார்கள். ஒன்று, இரண்டு, மூன்று என வரிசையாக ஸ்டேட்மென்ட் கொடுக்க முடிவு செய்திருக்கிறேன். இரண்டாவது ஸ்டேட்மென்டில் பிரபு பற்றி விரிவாகச் சொல்கிறேன். அதன்பிறகு அடுத்தடுத்து யார் எனச் சொல்கிறேன்.

ஏன் கைது செய்யவில்லை

ஏன் கைது செய்யவில்லை

அண்ணா நகர் போலீஸ் ஸ்டேஷனில் அந்த முக்கிய நபரை ஜட்டியோடு நிற்க வைத்து விசாரித்தவர்கள், கடைசியில் ஏன் ரிமாண்ட் செய்யாமல் விட்டார்கள்? அதுதான் முக்கியமான விஷயம். சுரேஷ் கொலையில் உடந்தையாக இருந்தவர்கள் யார்?, பசங்களுக்கு உதவியவர்கள் யாரையாவது இதுவரை ரிமாண்ட் பண்ணி இருக்காங்களா?, ஏன் பண்ணவில்லை? அரசியல்வாதிகள்தான் அவருடைய எதிரிகள். அவர்களை ஏன் கைது பண்ணவில்லை? குற்றவாளிகள் எல்லாமே ஏழைகள்... என்னோட இருந்த என் உறவினர்களை மட்டுமே கைதுசெய்திருக்கிறார்கள். ஏன் மற்றவர்களைப் பிடிக்கவில்லை.

என்னை பலிகடா ஆக்குவதா?

என்னை பலிகடா ஆக்குவதா?

தி.மு.க ஆட்சியிலேயே நான் வெளியே போய்விட்டேன். மதுரையிலேயே இல்லை. எங்களை மட்டுமே ஏன் பலிகடா ஆக்குகிறீர்கள்... உள்ளுக்குள் நடந்தது தெரிய வேண்டுமா, இல்லையா?" என்னைப் பிடிக்காதவர்கள் என்னை வைத்து பயன்படுத்தவும் செய்யலாம். பலிகடாவும் ஆக்கலாம். வழக்கில் கீழே இருந்து விசாரியுங்கள். நான் பேசமாட்டேன். பேசினால் அதில் உறுதியாக இருப்பேன் என்று கூறியுள்ளார் அட்டாக் பாண்டி.

இப்போது கைது ஏன்?

இப்போது கைது ஏன்?

அட்டாக் பாண்டி சொல்லும் அந்த நபர், ‘பொட்டு' மறைவுக்குப் பிறகு, அதிகாரம் உள்ளவராக வலம் வருகிறார். இரண்டரை ஆண்டுகாலத்திற்குப் பின்னர் அட்டாக் பாண்டி அரெஸ்ட் செய்துள்ளது போலீஸ். அதுவும் ஸ்டாலின் மக்களை சந்திக்க கிளம்பியுள்ள இந்த நேரத்தில் அட்டாக் பாண்டி கைது செய்யப்பட்டுள்ளதால் பொட்டு சுரேஷ் கொலை வழக்கு மீண்டும் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது.

எந்த புற்றில் இருந்து எந்த பாம்பு வெளியே வரப்போகுதோ தெரியலையே?

English summary
Arrested Attack Pandi has said that he has been victimised in Pottu Suresh murder case
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X