For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜெயலலிதாவுக்கு வெளிநாட்டில் சிகிச்சை அளிக்க சொல்லவில்லை.. டாக்டர் விக்ரம் வாக்குமூலம்!

ஜெயலலிதாவுக்கு வெளிநாட்டில் சிகிச்சை அளிக்க சொல்லவில்லை என்று ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் ஆஜரான டாக்டர் விக்ரம் விளக்கமளித்துள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: ஜெயலலிதாவுக்கு வெளிநாட்டில் சிகிச்சை அளிக்க சொல்லவில்லை என்று ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் ஆஜரான டாக்டர் விக்ரம் விளக்கமளித்துள்ளார்.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்கும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் முன்பு இன்று ஆஜரான திவாகரனின் மருமகன் டாக்டர் விக்ரம், ஜெயலலிதாவுக்கு வெளிநாட்டில் சிகிச்சை அளிக்கச் சொல்லவில்லை என்று வாக்குமூலம் அளித்துள்ளார்.

I did not refer foreign treatment to Jayalalitha: Dr.Vikram

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் ஜெயலலிதாவோடு சம்பந்தப்பட்ட எல்லோரிடமும் விசாரணை நடத்தி வருகிறது.

திவாகரனின் மருகமன் டாக்டர் விக்ரம் அப்பல்லோ மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிகிறார். அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவுக்கு அளிக்கபப்ட்ட சிகிச்சை கள் குறித்து டாக்டர் விக்ரமுக்கு தெரியும் என்பதால் அவரிடம் விசாரணை நடத்துவதற்கு விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியிருந்தது. அதன்படி டாக்டர் விக்ரம் இன்று நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் முன்பு ஆஜராகி விளக்கமளித்தார்.

விசாரணையின்போது டாக்டர் விக்ரம் அளித்த வாக்குமூலம் குறித்து விசாரணை ஆணைய வட்டாரங்கள் கூறியதாவது:

தான் ஜெயலலிதாவுக்கு வெளிநாட்டில் சிகிச்சை அளிக்க வேண்டும் என கூறவில்லை. மேலும், ஜெயலலிதாவுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து திவாகரனை சந்தித்து பேசவில்லை எனவும் விக்ரம் வாக்குமூலம் தந்துள்ளதாக கூறப்படுகிறது.

English summary
son in law of Sasikala’s brother Divakaran Dr. Vikram appeared before Arumugasamy commission. the sources said Vikram says “I am not referred foreign treatment to Jayalalitha and also he said I am not discuss about treatment of Jayalalitha with Divakaran.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X