For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நான் ஏன் தேர்தலில் போட்டியிடவில்லை?: கார்த்திக் 'பரபரப்பு' விளக்கம்

By Siva
|

சிவகாசி: ஒரு தொகுதிக்குள் முடங்கிவிட வேண்டாம் என்பதால் தான் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை என்று நடிகர் கார்த்திக் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலில் விருதுநகர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் மாணிக்கம் தாகூர் எம்.பி.க்கு ஆதரவாக நடிகர் கார்த்திக் பிரச்சாரம் செய்தார்.

அப்போது அவர் கூறுகையில்,

கூட்டணி

கூட்டணி

சட்டசபை தேர்தலின்போது ஒரு கட்சியுடன் கூட்டணி வைத்தவர்கள் எல்லாம் இப்போது எங்கே இருக்கிறார்கள் என்றே தெரியவில்லை.

மின் பற்றாக்குறை

மின் பற்றாக்குறை

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட தற்போது மின் உற்பத்தி அதிகமாகவே உள்ளது. இருப்பினும் மின் பற்றாக்குறை மட்டும் தீரவில்லை.

கருப்பு பணம்

கருப்பு பணம்

காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்பு பணத்தை வெளியே கொண்டு வர உரிய நடவடிக்கைகள் எடுத்துள்ளது.

எம்.பி.

எம்.பி.

நான் கூட எம்.பி. சீட் வாங்கி ஒரு தொகுதியில் போட்டியிட்டிருக்கலாம். ஆனால் ஒரு தொகுதிக்குள் முடங்கிவிட வேண்டாம் என்று நினைத்து தான் போட்டியிடவில்லை.

கை

கை

இந்தியாவை 60 ஆண்டுகளாக உயர்த்திப் பிடித்துள்ள இந்த கையை(காங்கிரஸ் சின்னம்) விட வலிமையான கை வேறு எதுவும் இல்லை.

மக்கள்

மக்கள்

மக்களை பிரித்துப் பார்க்க விரும்புபவர்களுக்கு இடம் கொடுக்கக் கூடாது. அரசியல் லாபத்திற்காக மக்களிடம் விளையாடாதீர்கள் என்றார் கார்த்திக்.

தடியடி

தடியடி

கார்த்திக் மேடையில் பேசிக் கொண்டிருக்கையில் முதல் வரிசையில் இருந்த தொண்டர்கள் மேடையில் ஏற முயற்சித்தனர். போலீசார் தடுத்தும் கேட்காததால் லேசான தடியடி நடத்தப்பட்டது.

English summary
Actor Karthik told that he doesn't want to contest in the lok sabha election as he is not ready to confine himself within a constituency.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X