For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வாட்ஸ்அப் பற்றி எனக்கு எதுவுமே தெரியாது.. கெஞ்சும் வீரராகவன்

வாட்ஸ்அப் பற்றி தனக்கு எதுவும் தெரியாது என கைதாகியுள்ள வீரராகவன் தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    வாட்ஸ் அப்பில் வதந்தி பரப்பியவர் கைது- வீடியோ

    சென்னை: வாட்ஸ்அப் பற்றி தனக்கு எதுவும் தெரியாது என கைதாகியுள்ள வீரராகவன் தெரிவித்துள்ளார்.

    தமிழக வட மாவட்டங்களில் குழந்தைகளை கடத்தும் வட மாநில கும்பல்களின் நடமாட்டம் இருப்பதாக கடந்த சில நாட்களாக வாட்ஸ்அப்பில் வதந்திகள் பரவி வருகின்றன.

    இந்த வதந்திகளால் திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்களில் வடமாநிலங்களைச் சேர்ந்த பலர் சந்தேகத்தின் பேரில் பொதுமக்களால் தாக்கப்பட்டு வருவது அதிகரித்துள்ளது.

    மூதாட்டி கொலை

    மூதாட்டி கொலை

    திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே குலதெய்வ கோவிலுக்கு சென்றவர்களை குழந்தைகளை கடத்த வந்தவர்கள் என்று சந்தேகித்து கிராம மக்கள் சரமாரியாக தாக்கினர். இதில் ருக்மணி என்ற 65 வயது மூதாட்டி கொல்லப்பட்டார். படுகாயமடைந்த 2 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    கொடூர கொலை

    கொடூர கொலை

    இந்த அதிர்ச்சி அடங்குவதற்குள் திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காட்டில் மனநிலை பாதிக்கப்பட்ட நபரை கிராம மக்கள் சேர்ந்து அடித்து கொடூரமாக கொலை செய்தனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    போலீசார் எச்சரிக்கை

    போலீசார் எச்சரிக்கை

    இந்நிலையில் குழந்தை கடத்தல் தொடர்பாக வாட்ஸ்-அப்பில் வதந்தி பரப்புவோர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு ஓராண்டு சிறையில் அடைக்கப்படுவார்கள் என போலீஸார் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

    வீரராகவன் கைது

    வீரராகவன் கைது

    இந்த நிலையில் திருவண்ணாமலையில் 20 குழந்தைகள் கடத்தப்படுவதாக வாட்ஸ் அப்பில் வதந்தி பரப்பியதாக புரிசை கிராமத்தை சேர்ந்த வீரராகவன் என்பவரை அனக்காவூர் போலீசார் கைது செய்தனர்.

    தனக்கு எதுவும் தெரியாது

    தனக்கு எதுவும் தெரியாது

    அவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் வாட்ஸ்அப் குறித்து தனக்கு எதுவும் தெரியாது என வீரராகவன் தெரிவித்துள்ளார்.

    English summary
    I dont know anything about whatsapp says Veeraragavan. Veeraragavan has been arrested in for spreading rumor that 20 children were kidnapped in Thiruvannamalai.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X