For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தாது மணல் கொள்ளையில் நல்ல தீர்ப்பை எதிர்பார்க்கிறேன் - சகாயம் பேட்டி

By Karthikeyan
Google Oneindia Tamil News

கோவை: தமிழகத்தில் நடந்த தாது மணல் கொள்ளை பற்றிய அறிக்கை உயர்நீதி மன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி நல்ல தீர்ப்பு வரும் என்று எதிர்பார்ப்பதாக ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் கோவையில் தெரிவித்தார்.

கோவை வேளாண்மை பல்கலைக்கழகத்தில் இன்று ஊழல் எதிர்ப்பு இயக்கம் சார்பாக ஊறி திளைக்கும் ஊழலில் இருந்து தாய் நாட்டை காப்போம் என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட சகாயம் ஐ.ஏ.எஸ். கூறியதாவது: ஊழலில் இருந்து நாட்டை காக்க படித்த இளைஞர்கள் முன் வரவேண்டும். தற்போது உள்ள சூழ்நிலையில் நேர்மையாக இருப்பது மிகவும் கடினம். ஆனால் நேர்மைதான் மனிதனுக்கு அழகு.

 I expect better judgment in mineral sand - Sagayam

அரசு பள்ளி மாணவர்களுக்கு ஊழலிலின் பாதிப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். தமிழ்நாட்டை பாதுகாக்க மாணவர்கள் தமிழ்மொழியை ஆர்வத்துடன் கற்க வேண்டும். நான் எனது தாயையும், தமிழ்மொழியையும் அதிகம் நேசிக்கிறேன்.

படித்த இளைஞர்கள் சுயநலத்துடன் இல்லாமல் அநீதியை தட்டிக்கேட்க வேண்டும் என்றார். கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சகாயம், தமிழகத்தில் தாது மணல் கொள்ளையில் நல்ல தீர்ப்பை எதிர்பார்கிறேன்.

அதற்கான ஆவணங்கள் அனைத்தும் உயர்நீதி மன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது. ஊழல் தடுப்பு நடவடிக்கைகள் என்பது அரசுக்கு எதிரானது இல்லை. தடுப்பு நடவடிக்கைகள் அரசுக்கு அதிக வலு சேர்க்கும் என கூறினார்.

மேலும், நீர்நிலை ஆக்கிரமிப்பு அகற்றினால் மட்டுமே விவாசயிகள் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படு்ம். எனவே இதில் அரசாங்கம் அதிகபடியான கவனம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.

English summary
I expect better judgment in mineral sand, says Senior IAS officer U Sagayam
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X