For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நவராத்திரியில் ஜெ… கிருஸ்துமஸுக்கு சோனியா, ராகுல் காந்திக்கு ஜெயில்: இது சு.சாமி

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: நவராத்திரிக்கு ஜெயல்லிதா ஜெயிலுக்கு போயிருக்கிறார். அவருக்கு அடுத்த படியாக காங்கிரஸ் கட்சியின் சோனியா மற்றும் ராகுல் காந்தியை கிருஸ்துமஸ் தினத்தில் சிறைக்கு அனுப்புவதே தன் வேலை என்று சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.

1996ஆம் ஆண்டே சொத்துக் குவிப்பு வழக்கை ஜெயலலிதா மீது பதிவு செய்தவர் சுப்பிரமணிய சுவாமி. 18 ஆண்டுகள் கழித்து இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு அளிக்கப்பட்டது.

“I First Thought of Jayalalithaa Sending Sonia and Rahul Gandhi to Jail by Christmas” -Subramanian Swamy.

ஊழல்வாதிக்கு தண்டனை

இந்த தீர்ப்பு பற்றி கருத்து கூறிய சுப்ரமணியசுவாமி, "அவர் ஊழல்வாதியே. அவர் ஊழல்வாதி என்பது எனக்கு நன்றாகவே தெரியும்.

சபாஷ் சரியான தீர்ப்பு

ஆனால் சிறப்பு நீதிமன்ற நீதிபதியும் நேர்மையுடன் நிமிர்ந்து நின்று தைரியமாக சரியான தீர்ப்பை வழங்கியுள்ளார் என்றால் ஒரு இந்தியனாக எனக்கு பெருமையாக இருக்கிறது" என்றார்.

அடுத்து சோனியா, ராகுல்

ஜெயலலிதாவுக்கு நீதிமன்றம் அளித்த தண்டனையை "அபாரமானது" என்று வர்ணித்துள்ள சுப்பிரமணியன் சுவாமி, அடுத்து சோனியா, ராகுல் காந்தியை சிறைக்குள் தள்ளுவதே தனது வேலை என்று கூறியுள்ளார்.

ரூ.100கோடி எல்லாம்

மேலும் ரூ.100 கோடி அபராதமெல்லாம் அவருக்கு ஒன்றுமேயில்லை என்று நையாண்டியும் செய்தார்.

அடுத்த இலக்கு

"நேஷனல் ஹெரால்ட் செய்தித்தாள் விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா, மற்றும் ராகுல் காந்திதான் எனது அடுத்த இலக்கு.

கிருஸ்துமஸ் தினத்தில்

முதலில் ஜெயலலிதா பற்றியே பரிசீலித்தேன், இப்போது ராகுல், சோனியாவை கிறிஸ்த்மஸ் தினத்திற்குள் உள்ளே தள்ள முயற்சிகள் மேற்கொள்வேன்" என்றார்.

English summary
Dr. Swamy said that after Jayalalithaa, he now hopes “to get Congress leaders Sonia Gandhi and Rahul Gandhi,” in connection with the case over the acquisition of the National Herald newspaper. “I first thought of Jayalalithaa, but now will work on sending Ms. Sonia and Mr. Rahul to jail, hopefully by Christmas,” he said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X