For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அமைச்சர் விஜயபாஸ்கருக்கும் தனக்கும் தொடர்பில்லை- சுப்ரமணியம் கடிதம் சிக்கியது

அமைச்சர் விஜயபாஸ்கர் நண்பர் சுப்ரமணியம் தற்கொலைக்கு முன்பு எழுதிய கடிதம் சிக்கியுள்ளது.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

நாமக்கல்: தனக்கும் அமைச்சர் விஜயபாஸ்கருக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று தற்கொலைக்கு முன்பாக சுப்ரமணியம் கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாமக்கல்லை சேர்ந்த கான்ட்ராக்டர் சுப்ரமணியன், அமைச்சர் விஜயபாஸ்கர், உள்பட பல அரசியல்வாதிகளுக்கு மிக நெருக்கமான நண்பராக இருந்துள்ளார். ஏப்ரல் 7ஆம் தேதி சுப்ரமணியம் வீட்டில் வருமான வரி சோதனை நடைபெற்றது.

இது தொடர்பான விசாரணைக்கு ஆஜராகி வந்தார் சுப்ரமணியன். இந்த நிலையில் கடந்த 8ம்தேதி செவிட்டுரங்கன்பட்டியில் உள்ள அவரது தோட்டத்து வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

இந்த தற்கொலை சம்பவம் குறித்து அவரது மகன் சபரீஷ் மோகனூர் போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் இளங்கோ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார். சுப்பிரமணியன் வருமானவரித்துறை விசாரணைக்கு பயந்து தற்கொலை செய்து கொண்டாரா? இல்லை எனில் வருமானவரித்துறை சோதனைக்கு பிறகு யாராவது அவரை மிரட்டினார்களா? என்ற கோணத்தில் மனைவி, மகனிடம் விசாரித்தார் இளங்கோ.

விசாரணை அதிகாரி

விசாரணை அதிகாரி

இந்த நிலையில் நாமக்கல் மாவட்ட ஏடிஎஸ்பி செந்தில், இந்த வழக்கை விசாரிக்க மாவட்ட எஸ்.பி மகேஷ்வரன் நேற்றிரவு உத்தரவிட்டு உள்ளார்.
இதனையடுத்து மோகனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் இளங்கோவிடம் இருந்து இந்த வழக்கு தொடர்பான ஆவணங்கள் செந்திலிடம் ஒப்படைக்கப்பட்டது. ஏடிஎஸ்பி செந்தில் தலைமையிலான போலீசார் இன்று முதல் விசாரணையை தொடங்குவார்கள் என கூறப்பட்டது.

விசாரணை தொடங்கியது

விசாரணை தொடங்கியது

இந்த நிலையில் உடனடியாக தனது விசாரணையை தொடங்கியுள்ளார் செந்தில், செவிட்டுரங்கன்பட்டியில் சுப்ரமணியம் தற்கொலை செய்து கொண்ட பண்ணை வீட்டில் பணியாளர்களிடம் விசாரணையை தொடங்கிய செந்தில், பணியாளர்களிடம் பல்வேறு கேள்விகளை கேட்டுள்ளார்.

மனைவியிடம் விசாரணை

மனைவியிடம் விசாரணை

அவரது மனைவி, மகன், மருமகன் ஆகியோரிடம் நாமக்கல் மதுவிலக்கு ஏடிஎஸ்பி விசாரணை மேற்கொண்டார். அப்போது அவருக்கு வேறு ஏதேனும் பிரச்சினை இருந்ததா? என்றும் விசாரித்துள்ளார்.

தற்கொலை கடிதம்

தற்கொலை கடிதம்

சுப்ரமணியம் தற்கொலை செய்யும் முன்பு எழுதிய கடிதத்தை தனது உறவினர்களுக்கு அனுப்பியதாக கூறப்பட்டது. இந்நிலையில் நேற்று மதியம் தபாலில் ஒரு பார்சல் சுப்ரமணியம் வீட்டுக்கு வந்துள்ளது. இந்த கடிதத்தை இப்போது உறவினர்கள் வெளியிட்டுள்ளனர். அந்த கடிதத்தில் தனக்கும் அமைச்சர் விஜயபாஸ்கருக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

சிக்கியது எப்படி?

சிக்கியது எப்படி?

பல பக்கங்கள் எழுதப்பட்டுள்ள அந்த கடிதத்தில் வருமான வரித்துறையினர் கேட்ட கேள்விகள், அதனால் ஏற்பட்ட மன உளைச்சல் பற்றியும் குறிப்பிட்டுள்ளாராம். சுப்ரமணியம் தற்கொலை பற்றி விசாரணை நடைபெற்று வரும் நிலையில் திடீரென தற்கொலை கடிதம் வெளியாகியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிக்கியது எப்படி?

சிக்கியது எப்படி?

பல பக்கங்கள் எழுதப்பட்டுள்ள அந்த கடிதத்தில் வருமான வரித்துறையினர் கேட்ட கேள்விகள், அதனால் ஏற்பட்ட மன உளைச்சல் பற்றியும் குறிப்பிட்டுள்ளாராம். தனது தொழிலுக்கு பிஎஸ்கே தென்னரசு என்பவர் தொடர்ந்து தொல்லை அளித்து வந்ததாகவும், தன்னை பற்றி பல அவதூறுகளை அவர் பரப்பி வருவதாகவும் அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளாராம். குறிப்பாக தனக்கும் அமைச்சர் விஜயபாஸ்கருக்கும் எந்த தொடர்பும் இல்லை என அவர் தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.

13 பேருக்கு கடிதம்

13 பேருக்கு கடிதம்

தனது மனைவி மற்றும் சில உயர் அதிகாரிகள் உட்பட 13 பேருக்கு தனித்தனியே இது போன்ற கடிதங்களை சுப்ரமணி தபால் மூலமாக அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது. அதனை கைப்பற்றும் முயற்சியில் காவல்துறையினர் இறங்கியுள்ளனர். சுப்ரமணியம் தற்கொலை பற்றி விசாரணை நடைபெற்று வரும் நிலையில் திடீரென தற்கொலை கடிதம் வெளியாகியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

English summary
Subramaina, the dead govt contractor has said in a letter that he has no ties with minister Vijayabhaskar,
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X