For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எடப்பாடி பழனிச்சாமிக்கு என்ன நடக்கப்போகுதுன்னு எனக்கு தெரியும்.. டிடிவி தினகரன் சூசகம்!

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நடக்கப்போவது என்னவென்று எனக்கு தெரியும் என டிடிவி தினகரன் சூசகமாக தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நடக்கப்போவது என்னவென்று எனக்கு தெரியும் என டிடிவி தினகரன் சூசகமாக தெரிவித்துள்ளார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைக்கு செல்வதற்கு முன்பாக சசிகலா எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக தேர்வு செய்தார். ஆனால் அதற்குபின் சசிகலா குடும்பத்திற்கு எதிராக திரும்பிய முதல்வர் மற்றும் தமிழக அமைச்சர்கள் ஓபிஎஸ் உடன் கூட்டணி வைத்தனர்.

இதையடுத்து தொடர்ந்து சசிகலா குடும்பத்தை எதிர்த்து வரும் அவர்கள் சசிகலா குடும்பத்துடன் ஒட்டும் இல்லை உறவும் இல்லை என தெரிவித்து வருகின்றனர்.

எடப்பாடி பழனிச்சாமி பயம்

எடப்பாடி பழனிச்சாமி பயம்

இந்நிலையில் டிடிவி தினகரன் சென்னை பெசன்ட் நகரில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, பிரதமர் மோடி நடவடிக்கை எடுப்பார் என்ற பயம் எடப்பாடி பழனிச்சாமிக்கு உள்ளது.

எனக்கு தெரியும்

எனக்கு தெரியும்

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு என்ன நடக்கபோகுது என்று எனக்கு தெரியும். எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கியது சசிகலா தான்.

கொள்ளையடித்த பணம்

கொள்ளையடித்த பணம்

வருமானவரி சோதனையில் சிறிய அளவு தான் பிடிப்பட்டுள்ளது. பிடிபடாத பணம் ஏராளமாக உள்ளது. கொள்ளையடித்த பணம் தான் ஒப்பந்ததாரர் வீட்டில் சிக்கியுள்ளது.

திட்டம் தேவையில்லை

திட்டம் தேவையில்லை

மக்களுக்கு எதிரான திட்டங்களைதான் எடப்பாடி பழனிச்சாமி செயல்படுத்துகிறார். மலை, காடுகளை அழித்து 8 வழிச்சாலை திட்டம் தேவையில்லை. தமிழ்நாட்டு மக்களின் பணம் கொள்ளையடிக்கப்படுகிறது.

பாஜக மதவாத கட்சி

பாஜக மதவாத கட்சி

எடப்பாடி ஆட்சியை மத்திய அரசு தாங்கி பிடிக்கக்கூடாது. கூட்டணி அமைத்து மக்களவை தேர்தலில் போட்டியிடுவோம். பாஜக ஒரு மதவாத கட்சி, எனவே பாஜக உடன் என்றைக்குமே கூட்டணி இல்லை.

234 தொகுதிகளிலும்

234 தொகுதிகளிலும்

எடப்பாடி தொகுதி மட்டுமல்ல 234 தொகுதியிலும் முழு கவனம் செலுத்துவோம் துரோகம் இழைத்தவர்களை வீழ்த்தவேண்டும் என்ற நோக்கில் செயல்படுகிறோம்.

English summary
TTV Dinakaran says i know whats going to happen for Edappadi Palanisami. Sasikala only made him as chief minister.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X