For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சி.எஸ்.கேவில் ஆட வேண்டும்.. தமிழில்தான் பேசுவேன்.. தினேஷ் கார்த்திக் பரபரப்பு பேட்டி

சென்னை சேப்பாக்கத்தில் தினேஷ் கார்த்திக் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    மைதானத்தில் தமிழில் பேசியது பற்றி தினேஷ் கார்த்திக் விளக்கம்- வீடியோ

    சென்னை: சென்னை சேப்பாக்கத்தில் தினேஷ் கார்த்திக் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். கடைசி போட்டியில் காட்டிய அதிரடி குறித்து அவர் பேசி இருக்கிறார்.

    முத்தரப்பு தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா வெற்றிபெற்று நிதாஸ் கோப்பையை வென்றுள்ளது. இதன் கடைசி இரண்டு ஓவரில் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் மிகவும் அதிரடியாக ஆடினார்.

    ஒரே போட்டியின் மூலம் இவர் கிரிக்கெட் உலகின் சூப்பர் ஸ்டார் ஆகியுள்ளார். கடைசி இரண்டு ஓவரில் மொத்தம் தினேஷ் கார்த்திக் 8 பந்துகள் பிடித்தார். இதில் 3 சிக்ஸ் இரண்டு பவுண்டரி அடித்தார், மொத்தம் 29 ரன்கள் எடுத்தார்.

    கொல்கத்தா கேப்டன்

    கொல்கத்தா கேப்டன்

    ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியின் கேப்டனாக இருப்பது குறித்து தினேஷ் கார்த்திக் பேசினார். அதில் ''கொல்கத்தா அணிக்கு கேப்டனாக இருப்பது மிகவும் சந்தோசம். இது மிக பெரிய வாய்ப்பு. உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடும்பட்சத்தில் கண்டிப்பாக ஐபிஎல் போட்டியில் நல்ல வாய்ப்பு கிடைக்கும்.'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

    சிஎஸ்கே

    சிஎஸ்கே

    மேலும் சென்னை அணி குறித்தும் பேசினார். அதில் ''சென்னை அணியில் இல்லாததால் எனக்கு வருத்தம். ஐபிஎல் போட்டியில் சென்னை அணிக்காக விளையாட வேண்டும் என்பது நீண்ட நாள் விருப்பம். இந்த முறை அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை.'' என்று குறிப்பிட்டுள்ளார்.

    தமிழகத்தை சேர்ந்தவர்கள்

    தமிழகத்தை சேர்ந்தவர்கள்

    மேலும் ''தமிழக அணியில் சிறப்பாக விளையாடினால் இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கும். தற்போது இந்திய அணியில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் சிறப்பாக விளையாடுகிறார்கள். அஸ்வின் மிகவும் பெரிய வீரராக மாறிவிட்டார். வாஷிங்டன் சுந்தர் இந்த தொடர் மூலம் தன்னை நிரூபித்துவிட்டார். விஜய் சங்கரும் நன்றாக ஆடினார்'' என்றுள்ளார்.

    ஒரே வாய்ப்பு

    ஒரே வாய்ப்பு

    மேலும் ''தற்போது இந்திய அணியில் கடுமையான போட்டி இருக்கிறது. ஒரு முறைதான் வாய்ப்பு கிடைக்கும். அப்போதே நம்முடைய திறமையை நிரூபிக்க வேண்டும். அப்படி நிரூபித்தால்தான் இந்திய அணியில் தொடர்ந்து நீடிக்க முடியும்'' என்றுள்ளார்.

    நம்பிக்கை

    நம்பிக்கை

    மேலும் கடைசி போட்டி குறித்து பேசிய தினேஷ் கார்த்திக் ''அந்த சிக்ஸ் அடிப்பேன் என்று நம்பிக்கை இருந்தது. கடைசியில் சிக்ஸ் அடித்தால் வெற்றி பெறலாம். எனக்கு தனிப்பட்ட வகையில் சிறந்த இன்னிங்ஸ் அது. இதுபோல ஆடவேண்டும் என்று பல நாள் ஆசை இருந்தது'' என்றுள்ளார்.

    தமிழ்தான்

    தமிழ்தான்

    மேலும் களத்தில் தமிழில் பேசுவது ஏன் என்றுள்ளார். அதில் ''களத்தில் தமிழில் பேசுவதே பிடிக்கும். தமிழக வீரர்களுடன் தமிழில் மட்டுமே பேசுவேன். ஆங்கிலத்தில் பேசுவதைவிட தமிழில் பேசுவது இயல்பாக இருக்கிறது'' என்றுள்ளார்.

    English summary
    Ind won the final match against Bangladesh in Sri Lanka. India lifts Nidahas Trophy. Mind-blowing last two overs the match between Ind and Bangladesh has changed the result. I love to speak in Tamil while playing says Dinesh Karthik. He also added that, he always wanted to play for Chennai Super Kings team.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X