• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அம்மா ஐ லவ் யூ... தற்கொலைக்கு முன் உருகிய விஷ்ணு பிரியா

By Mayura Akilan
|

திருசெங்கோடு: அப்பா... அம்மாவைத் திட்டாதீங்கப்பா... அம்மா... ஐ லவ் யூ... நான் எங்க இருந்தாலும் உங்களை பார்த்துக்கிட்டுதான் இருப்பேன்... உங்களோட பேசிட்டுதான் இருப்பேன் என்று தனது மரணத்திற்கு முன்னர் உருக்கமான கடிதம் எழுதியுள்ளார்.

கடலூர் மாவட்டம், கோண்டூர் பகுதியைச் சேர்ந்தவர் விஷ்ணு பிரியா 27. இவரது தந்தை ரவி காவல்துறையில் கூடுதல் காவல் கண்காணிப்பாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். தாய் கலைச்செல்வி வங்கிப் பணியில் இருந்து அண்மையில் விருப்ப ஓய்வு பெற்றவர்.

I love you amma Vishnu Priya an eight-page suicide note

சென்னை தலைமைச் செயலகத்தில் வருவாய்த் துறையில் பணிபுரிந்து வந்த இவர், கடந்த 2014-ம் ஆண்டு டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வில் தேர்ச்சி பெற்று, சிவகங்கையில் பயிற்சி முடித்து கடந்த பிப்ரவரி மாதம், 1-ம் தேதி திருச்செங்கோடு காவல் துணை கண்காணிப்பாளராக கடந்த பிப்ரவரி மாதம் 2-ம் தேதி பொறுப்பேற்றார். இளம் டி.எஸ்.பி.யாக தனது பணியைத் துவக்கிய விஷ்ணு பிரியா, பொதுமக்கள் சம்பந்தப்பட்ட பல பிரச்னைகளை சுமுகமான தீர்வுகளை கண்டுள்ளார்.

திருச்செங்கோட்டில் போக்குவரத்து உதவி ஆய்வாளரால் ஆசிரியர் தாக்கப்பட்ட பிரச்னை தொடர்பாக நடைபெற்ற மறியல் போராட்டத்தில் ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகளிடம் பேச்சுவார்த்தை நடத்திவிட்டு பிற்பகல் 3 மணி அளவில் தனது அலுவலகத்தில் உள்ள குடியிருப்புக்கு டிஎஸ்பி விஷ்ணுபிரியா சென்றுள்ளார்.

மாலை 6 மணிக்குப் பிறகு, அறையின் கதவு திறக்கப்படவில்லை இதனையடுத்து முகாம் அலுவலகத்தில் இருந்த போலீஸார், டி.எஸ்.பி. தங்கியிருந்த குடியிருப்பின் ஜன்னல் வழியாக பார்த்தபோது, விஷ்ணு பிரியா தனது சுடிதார் துப்பட்டாவில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தது தெரியவந்தது. தப்போது, அவரது தற்கொலைக்கு காவல்துறை உயரதிகாரிகளே காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த நிலையில் டி.எஸ்.பி விஷ்ணுபிரியா பெற்றோருக்கு எழுதிய உருக்கமான கடிதம் வெளியிடப்பட்டது. சேலம் காவல்துறை ஆணையர் அமல்ராஜ் 9 பக்க கடிதத்தை வெளியிட்டுள்ளார். அப்பா, அம்மா உள்ளிட்ட உறவினர்களுக்கு தனது மனதில் உள்ளதை ஆங்கிலம் கலந்த தமிழில் எழுதியுள்ளார்.

அம்மா நான் பிரியாம்மா... ஐ.லவ்.யூம்மா... ஐ மிஸ் யூம்மா என்று தொடங்குகிறது இந்த கடிதம். உருகி உருகி தனது பாசத்தை கொட்டியுள்ளார் விஷ்ணு பிரியா.

அப்பா அம்மாவை திட்டாதீங்க அப்பா... இது என்னோட முடிவுதான். எனக்கு அப்புறம் எல்லாத்தையும் திவ்யாவுக்கு கொடுங்கப்பா. என்னால முடியல சாரிப்பா...அம்மா ஐ லவ் யூ... ஐ மிஸ் யூ... நான் எங்க இருந்தாலும் உங்களை பாத்துக்கிட்டே இருப்பேன்.. உங்க கூட பேசிட்டே இருப்பேன். நான் இறந்ததுக்கு அப்புறம் என் உடம்பை பிரச்சனை பண்ணாம என் பெற்றோர் கிட்ட கொடுங்க.

காவல் துறை பணியை தெய்வத்துக்கு இணையாகக் கருதினேன். ஆனால், எனக்குதான் தகுதியில்லை. என் உடலை பரிசோதனை செய்யாமல் பெற்றோரிடம் ஒப்படைக்கவேண்டும். கோகுல்ராஜ் கொலை வழக்கையும் தன் தற்கொலையையும் தொடர்புபடுத்தவேண்டாம். இது என்னோட தனிப்பட்ட முடிவு அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். தமது பெற்றோர்களை யாரும் துன்புறுத்த வேண்டாம் எனவும் தனது மரணத்தை அரசியலாக்க வேண்டாம் என்று டிஎஸ்பி விஷ்ணுபிரியா தனது கடிதத்தில் எழுதியுள்ளார்.

விஷ்ணு பிரியாவின் தற்கொலையும், அவர் எழுதியுள்ள கடிதமும் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

 
 
 
English summary
Importantly, an eight-page suicide note is also reported to have been found. According to DC, she is said to have written that she did not want to continue in the police force, and that no post-mortem is to be done to her body.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more