For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஸ்டாலின் சொன்னா நியூஸ்.. கமல் சொன்னா ப்ளாஷ்! வரிந்துகட்டும் வலைவாசிகள்

ஊழல் ஆதாரங்களை பதிவு செய்யுங்கள் என்று கமல் அறிக்கையாக வெளியிட்டதற்கு ஆதரவு எதிர்ப்பும் கலந்த கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிடப்படுகின்றன.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: அனைத்து துறைகளிலும் ஊழல் நடைபெறுகிறது என்று ஆதாரத்துடன் அமைச்சர்களுக்கு அனுப்புங்கள் கமல் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். கமலின் கருத்துக்கு ஆதரவு எதிர்ப்பும் கலந்து சமூக வலைத்தளங்களில் பதிவிடப்படுகின்றன.

ஊரே கூடி ஊழல் ஊழல் என்று ஓலமிட்டதை ஊடகத்தில் கண்டபின்பும், சாட்சி உண்டா? ஆதாரம் உண்டா? என கேட்கும் குணாதிசயம், கல்லுளிமங்கர் போன்ற ஊழலார்க்கே உரித்தான குணாதிசயம்.

ஊழலே இல்ல நிரூபி பாப்போம்னு அமைச்சர் கேட்டார்ல.? ஊழல் இருக்குன்னா எழுதி அனுப்பிடுங்க. கார்டு, கவர்ல, கடுதாசில வேணாம். கிழிச்சுப் போட்டுட்டுப் போயிட்டே இருப்பாங்க. டிஜிட்டல் யுகம் இது. டிஜிட்டலா பதிவு செய்ங்க. ஆனா மரியாத தவறாம அதச் செய்யுங்க என்று கமல் கூறியுள்ளார். இதற்கு டுவிட்டரில் பலரும் கருத்துக்களை பதிவிட்டுள்ளனர். அவற்றில் சில இங்கே.

மக்கள் யுத்தம்

ஊழலுக்கு எதிரான கமலின் அறிக்கைக்கு பலரும் வாழ்த்தும் வரவேற்பும் தெரிவித்துள்ளனர். சுப வீரபாண்டியன் தனது டுவிட்டர் பக்கத்தில் 'தமிழகத்தின் ஊழல் அரசுக்கு எதிரான கமல் அறிக்கை ஒரு மக்கள் யுத்தம். அவருக்கு நம் வாழ்த்துகள்! பாவம் தமிழக அமைச்சர்கள்' என்று குறிப்பிட்டுள்ளார்.

கடைசி வாய்ப்பு..

கமல் அறிக்கை கண்டு பா.ஜ.க. கொந்தளிக்கும் காரணம்..யார் இயக்குவது இந்த அடிமை அரசை.. மக்கள் ஒன்று திரள கடைசி வாய்ப்பு என்று ஒருவர் பதிவிட்டுள்ளார்.

தலைகுனிவு

தலை கணம் பிடித்தவனின் தலையை வெட்டாமல் அவனுக்கு தலைகுனிவை ஏற்படுத்தினால் போதும் அவனது ஆணவம் அழிய வழி போன்று உள்ளது கமல் எழுதிய அறிக்கை என்று ஒருவர் கூறியுள்ளார்.

குற்றமுள்ள நெஞ்சு

குற்றமுள்ளநெஞ்சு தான் குருகுருக்கும்,அப்படி பார்த்தா தமிழக அமைச்சரவையே குருகுருக்குதே கமல் பேச்சை கேட்டு ச்சே என்னடா கருமம் இது என்று பதிவிட்டுள்ளார் மற்றொரு பதிவர்.

கோபம் ஏன்?

என் அடிமையை.. நீ எப்படி அடிக்கலாம் என்கிற கோபம்தான் பாஜகவினரிடம் கமல் எதிர்ப்பில் பட்டவர்த்தமாகத் தெரிகிறது என்பது ஒருவரின் கருத்து.

புஸ்வானம்

கமல் ஊழலை ஆதரத்துடன் ஸ்ட்ரிங் ஆபரேஷன் செய்து நிரூபித்து இருக்க வேண்டும்..இந்த அறிக்கை ஒரு புஷ்வாணம் என்று ஒருவர் பதிவிட்டுள்ளார்.

ஓவியாவுக்கு அனுப்பிட்டு வறோம்

ஊழலை ஆன்லைனில் புகாராக அனுப்புங்கள் என்று கமல் கூற, வாத்தியாரே மொதல்ல ஓவியாவுக்கு ஓட்டு போட்டு முடிச்சுட்டு அப்பறமா அனுப்பலாம். ம்ம்.. ம்ம்.. ம்ம். என்று பதிவிட்டுள்ளார் ஒருவர்.

அவ்வளவுதான்

நமக்கு ஸ்டாலின் சுமத்தும் குற்றச்சாட்டுகள் நியூஸ், அதையே கமல் சொல்வது ப்ளாஷ் நியூஸ், அவ்வளவு தான் என்று தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார் ஒரு டுவிட்டர் வாசி.

English summary
Kamal hassan said, I became an adolescent politician the day I opposed Hindi imposition.His tweet also mentions the URL to the page on Tamil Nadu government's website that has the list of ministers.Fans and some politicians welcome for kamal tweets hastag #isupportKamalhaasan.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X