For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஹட்சன் பால் பண்ணை நிறுவனங்களில் வருமான வரி அதிகாரிகள் ரெய்டு

By Mayura Akilan
Google Oneindia Tamil News

I-T Department conducts search in Hatsun Agro premises
சென்னை: ஹட்சன் பால் பண்ணை நிறுவனத்திற்கு சொந்தமான அலுவலகங்களில் 100 பேர் அடங்கிய வருமானவரித்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்

ஆரோக்யா பால் மற்றும் பால் பொருட்கள் உற்பத்தி செய்யும் ஹட்சன் நிறுவனத்திற்கு தமிழகம் முழுவதும் பால் உற்பத்தி நிறுவனங்களும் உள்ளன.

சேலம் அருகே உள்ள காரிப்பட்டியில் ஹட்சன் நிறுவனத்திற்கு சொந்தமான பால் பண்ணை உள்ளது. இங்கு பால் சுத்தப்படுத்தி சென்னை மற்றும் வெளியூர்களுக்கு சப்ளை செய்யப்பட்டு வருகிறது. தயிர், நெய், வெண்ணையும் தயார் செய்து அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

இந்த பால்பண்ணைக்கு நேற்று 2 கார்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீரென வந்தனர். பின்னர் இவர்கள் பால் பண்ணைக்குள் சென்று விசாரித்தனர்.

இந்த சோதனையின் போது பால் பண்ணையில் இருந்து யாரையும் வெளியில் விடவில்லை. அதுபோல் வெளியில் இருந்து யாரையும் உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை.

இதே நிறுவனத்திற்கு சொந்தமான சென்னை அலுவலகத்தின் 5 இடங்களிலும், சேலத்தில் 4 இடங்களிலும், கோவையில் ஒரு இடத்திலும் வருமான வரித்துறை புலனாய்வு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

முறையாக வருமான வரி செலுத்தவில்லை என்ற புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

English summary
The Income Tax Department has conducted search at various business locations of Hatsun Agro Products related to alleged false claims made by an individual in the company.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X