For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நான் எங்கும் ஓட மாட்டேன்.. எதையும் சந்திப்பேன்.. அரசுக்கு கருணாஸ் சவால்

யாரையாவது தவறாக பேசி இருந்தால் அதற்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கருணாஸ் தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    நான் எங்கும் ஓட மாட்டேன்..எதையும் சந்திப்பேன்-கருணாஸ்- வீடியோ

    சென்னை: எனக்கு பாதுகாப்பு தேவையில்லை, என்னை பாதுகாக்க என் சமூகம் இருக்கிறது, யாரையாவது தவறாக பேசி இருந்தால் அதற்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன் என்று முக்குலத்தோர் புலிப்படைத் தலைவர் கருணாஸ் தெரிவித்துள்ளார்.

    கருணாஸ் பிரச்சனை தமிழகத்தில் விஸ்வரூபம் எடுத்து இருக்கிறது. கடந்த 16ஆம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கருணாஸ் பேசினார். அதில் முதல்வரையே நான் அடிப்பேன் என்றும் போலீசுக்கு எதிராகவும் பேசினார் .

    மேலும் ஜாதி கலவரத்தை தூண்டும் வகையிலும், கொலை செய்வேன் என்றும் கூட அவர் பேச்சில் சில கருத்துக்கள் இடம்பெற்று இருந்தது. இவர் மீது தற்போது வழக்கு பதியப்பட்டு இருக்கிறது.

    முழுதாக பாருங்கள்

    முழுதாக பாருங்கள்

    இந்த நிலையில் கருணாஸ் சென்னையில் அளித்த பேட்டியில், எனக்குப் பாதுகாப்பு தேவையில்லை. என் பாதுகாப்புக்கு தேவர் இருக்கிறார், தேவர் சமுதாயம் இருக்கிறது. நான் பேசிய 47 நிமிட வீடியோ யூட்யூபில் உள்ளது. முழுவதையும் கேட்டால் நான் தவறாக பேசியதாக சொல்லமாட்டீர்கள்.

    எடிட் செய்துள்ளனர்

    எடிட் செய்துள்ளனர்

    பத்திரிக்கை விவகாரத்தில் குறிப்பிட்ட சமூகத்தின் பெயரை கூறியதற்காக வருத்தம் தெரிவிக்கிறேன். யார் யார் எப்படி பேசுகிறார்கள் என்று எனக்கு தெரியும். நான் பேசியதை யாரோ எடிட் செய்து இருக்கிறார்கள்.

    நான் தலைமறைவாகவில்லை

    நான் தலைமறைவாகவில்லை

    நான் எங்கும் தலைமறைவாகவில்லை. நான் எங்கும் ஓட மாட்டேன்: எதையும் சந்திப்பேன். சாதி ரீதியாக என்னை தாக்கி சமுதாய பிரச்சனையை உருவாக்க பார்க்கிறார்கள். சட்ட ஒழுங்கு பிரச்சனை எதுவும் என்னால் நடக்க கூடாது. காவல்துறை அதிகாரியை நேரடியாக நிறுத்தி எப்படி எல்லாம் பேசுகிறார்கள், நான் அப்படியா பேசினேன்.

    சட்டம் சரியில்லை

    சட்டம் சரியில்லை

    நான் யாரிடமும் கட்ட பஞ்சாயத்து செய்தது இல்லை. நான் அரசுக்கு ஜால்றா அடிக்க விரும்பவில்லை. நான் எந்த சமுதாயத்திற்கும் எதிரான அராஜகத்தையும் ஆதரிக்க மாட்டேன். என்னை சிலர் வாழ விடுவதில்லை, நான் என்ன செய்வது. நாட்டில் சட்டம் சரியாக இல்லை.

    வருத்தம் தெரிவிக்கிறேன்

    வருத்தம் தெரிவிக்கிறேன்

    என்னை பற்றி யாரும் செய்தி கூட போடுவதில்லை. நான் மனித நேயத்தை மதிப்பவன். நான் மொழியை மதிப்பவன். நான் எந்த சமுதாயத்திற்கும் எதிரானவன் இல்லை. நான் அங்கே பேசியதில் உணர்ச்சி வசப்பட்டு பேசி இருந்தால் வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

    கோர்ட்

    கோர்ட்

    முதல்வர் எனக்கு பாதுகாப்பு கொடுக்கவில்லை. தேவர் ஜெயந்தி அப்போது எனக்கு பாதுகாப்பு அளிக்கவில்லை. முதல்வரை நான் மறிக்க போவதாக அதிகாரிகள் அவரிடம் தவறான தகவல்கள் கொடுத்து இருக்கிறார்கள். இதைதான் குற்றச்சாட்டாக வைத்தேன். நான் என் இறப்பை நினைத்து பயப்படவில்லை. ஜெயக்குமார் அரிச்சந்திரன் கிடையாது. நான் அவரை கோர்ட்டில் சந்திக்கிறேன். தவறு என்றால் தவறுதான். யார் செய்தாலும் தவறுதான் என்று குறிப்பிட்டுள்ளார்.

    English summary
    I will face government action says Karunas in a press meet.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X