For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சபரிமலை மத நம்பிக்கை.. சாகும் வரை போராட தயார்.. சுரேஷ் கோபி பரபரப்பு பேச்சு

கலாச்சாரத்தை காப்பாற்ற இறுதிவரை போராடுவதாக சுரேஷ்கோபி கூறியுள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    சபரிமலை தீர்ப்பு குறித்து சுரேஷ் கோபி பரபரப்பு பேச்சு- வீடியோ

    நாகர்கோவில்: சபரிமலை விவகாரத்தில் மத நம்பிக்கையை காப்பாற்ற சாகும்வரை கூட போராட தான் தயாராக இருப்பதாக நடிகரும் எம்.பியுமான சுரேஷ்கோபி தெரிவித்துள்ளார்.

    மலையாள சூப்பர் ஸ்டார்கள் அரசியல் சாயம் தங்கள் மீது பட்டுவிடாமல் மிக மிக ஜாக்கிரதையாக ஒதுங்கி இருந்த நேரத்தில், திடீரென அரசியல் விவகாரங்களை பற்றி கருத்து கூறி விமர்சன கணைகள் தொடுத்து அனைவருக்கும் ஷாக் கொடுத்தவர் நடிகர் சுரேஷ்கோபி. பிறகு திடீரென ஒருநாள் பிரதமர் மோடியை சந்திக்கவும், அப்போதே ஓரளவு கணிக்கப்பட்டு விட்டது, "விரைவில் பொறுப்புக்கு வருகிறார்" என்று. அதன்படியே சிறிது நாளில் பாஜக சார்பில் ராஜ்யசபா எம்பியானார்.

    [இரு "டிரைவர்கள்".. ஒருவர் கியர் போட.. இன்னோருவர் ஸ்டியரிங்கை இயக்க.. இதெப்படி கீது!?]

    பகிரங்க வேண்டுகோள்

    பகிரங்க வேண்டுகோள்

    மோகன்லால் உள்ளிட்ட பிரபல நடிகர்களை போலவே சுரேஷ் கோபியும் ஒரு தீவிரமான ஐயப்ப பக்தர். பாடகர் ஜேசுதாசை சரிபமலை கோயிலுக்குள் அனுமதிக்க வேண்டு என்று பகிரங்க வேண்டுகோளும் விடுத்தவர். தற்போது சபரிமலை விவகாரம் குறித்த உச்சநீதிமன்ற தீர்ப்பிலும் சுரேஷ் கோபி கருத்து தெரிவித்துள்ளார்.

    அம்மன் சிலைகள் ஊர்வலம்

    அம்மன் சிலைகள் ஊர்வலம்

    திருவனந்தபுரத்தில் நவராத்திரி விழா வருகிற 10-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக குமரி மாவட்டத்தில் இருந்து சுசீந்திரம் நங்கை அம்மன், குமார கோவில் வேளிமலை முருகன் மற்றும் பத்மநாபபுரம் தேவாரக்கட்டு சரஸ்வதி அம்மன் ஆகிய சாமி சிலைகள் வருடந்தோறும் இந்த விழாவுக்கு பங்கேற்க ஊர்வலமாக அனுப்பி வைக்கப்படும்.

    அணிவகுப்பு மரியாதை

    அணிவகுப்பு மரியாதை

    அம்மன் கோவிலில் இருந்து வெளியே எழுந்தருளியபோது தமிழக மற்றும் கேரள போலீசார் அணிவகுத்து நின்று இசைவாத்தியங்கள் முழங்க துப்பாக்கி ஏந்தி அணிவகுப்பு மரியாதை செய்வது வழக்கம்.

    சுரேஷ்கோபி சாமி கும்பிட்டார்

    சுரேஷ்கோபி சாமி கும்பிட்டார்

    அதன்படி, நவராத்திரி பூஜைக்காக சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் சிலை ஊர்வலமாக இன்று புறப்பட்டது. கேரள, தமிழக போலீசார் துப்பாக்கி ஏந்தி வழக்கம்போல் அணிவகுப்பு மரியாதையை செலுத்தினர். இந்த ஊர்வல நிகழ்ச்சியில் சுரேஷ்கோபி கலந்து கொண்ட சாமி கும்பிட்டார். சுரேஷ்கோபி வருடந்தோறும் இந்த ஊர்வலத்தில் தவறாமல் கலந்து கொண்டு வருகிறார்.

    கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள்

    கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள்

    பின்னர், சபரிமலை தீர்ப்பு குறித்து கருத்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த சுரேஷ்கோபி, தீர்ப்பு என்பது தனிப்பட்ட விஷயம் என்பதால் அரசியல் ரீதியாக எந்த கருத்தையும் கூற விரும்பவில்லை. ஆனால் செய்ய வேண்டியது மட்டும் நிறைய உள்ளது. ஏனென்றால் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு என்பது வேறு, மத நம்பிக்கை என்பது வேறு. நாங்கள் மிகவும் கடவுள் நம்பிக்கை உடையவர்கள்.

    சாகும்வரை போராடுவேன்

    சாகும்வரை போராடுவேன்

    கலாச்சாரம், பாரம்பரியத்தை காப்பாற்ற நினைப்பவர்கள். பாரம்பரிய கலாசாரத்தை காப்பாற்றவும், மத நம்பிக்கையை காப்பாற்றவும் சாகும் வரை கூட போராட நான் தயாராகவும் இருக்கிறேன். இது சம்பந்தமான போராட்டம் என்றாலும் அதில் முன் நிற்கவும் நான் எப்போதும் தயாராகத்தான் இருக்கிறேன்" என்றார்.

    English summary
    I will fight to save religious: M.P. Suresh Gopi
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X