எடப்பாடி பழனிச்சாமியாவது முதல்வராக நீடிப்பார் என நம்புகிறேன்: திருநாவுக்கரசர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மதுரை: தற்போது தமிழக முதல்வராகியுள்ள எடப்பாடி பழனிச்சாமியாவது பதவியில் தொடர்வார் என்று தாம் நம்புவதாக, தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

அதிமுக சட்டப்பேரவை கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமியை ஆட்சியமைக்க ஆளுநர் வியாழக்கிழமை அழைப்பு விடுத்தார். அதனைத் தொடர்ந்து வியாழக்கிழமை மாலை அவர் முதல்வராக பதவியேற்றார். அவருடன் 30 அமைச்சர்கள் பதவியேற்றனர்.

I will hope to Edappadi K. Palanisamy as a chief minister, said Thirunavukarasar

இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க மதுரை வந்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர், விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அப்போது, புதிதாக அமைந்திருக்கும் தமிழக அரசுக்கு வாழ்த்து கூறினார்.

தமிழகத்தில் நிலவிய குழப்பத்தால், குழம்பிய குட்டையில் மீன்பிடிக்க முயற்சித்த பா.ஜ.க. அரசின் முயற்சி பலனளிக்காமல் போனதாகவும் அவர் குறிப்பிட்டார்.மேலும் தற்போது தமிழக முதல்வராகியுள்ள எடப்பாடி பழனிச்சாமியாவது பதவியில் தொடர்வார் என்று தாம் நம்புவதாகவும் திருநாவுக்கரசர் கூறினார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
TNCC president Thirunavukarasar has said, will hope Edappadi K. Palanisamy as a Tamilnadu chief minister
Please Wait while comments are loading...