For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

3 முறை முதல்வராக இருந்துள்ளேன்: அதுவே போதும்.. என்னால் ஒரு போதும் ஆட்சி கவிழாது.. ஓபிஎஸ் திட்டவட்டம்

மூன்று முறை முதல்வராக இருந்துள்ளேன் அதுவே போதும் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    ஓபிஎஸ் கொடுத்த பரபரப்பு பேட்டி

    சென்னை: என்னால் ஒரு போதும் ஆட்சி கவிழாது, மூன்று முறை முதல்வராக இருந்துள்ளேன் அதுவே போதும் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

    எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சியை கலைக்க துணை முதல்வர் ஓபிஎஸ் திட்டமிட்டார் என டிடிவி தினகரன் குற்றம்சாட்டியிருந்தார். இது அதிமுகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்நிலையில் இதுகுறித்து சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது வீட்டில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார்.

    ஆட்சி கவிழாது

    ஆட்சி கவிழாது

    அப்போது அவர் பேசியதாவது, கட்சியில் இணைந்த அன்றே என்னால் ஆட்சி கவிழாது என உறுதியளித்தேன்.

    நண்பர் வீட்டில் சந்தித்தேன்

    நண்பர் வீட்டில் சந்தித்தேன்

    கடந்த ஆண்டு ஜூலை மாதம் 12ஆம் தேதி டிடிவி தினகரனை சந்தித்தது உண்மைதான். தினகரனுக்கும் எனக்கும் பொதுவான ஒரு நண்பர் வீட்டில் அவரை சந்தித்தேன்.

    ஈனத்தனமான செயல்

    ஈனத்தனமான செயல்

    அதிமுகவில் இணைந்த பிறகு தினகரனுடன் எந்த ஒட்டும் இல்லை உறவும் இல்லை. ஆட்சியை கவிழ்த்து முதல்வராகும் ஈனத்தனமான செயலில் நான் ஒரு போதும் ஈடுபட மாட்டேன்.

    சதியை செய்துள்ளார்

    சதியை செய்துள்ளார்

    மூன்று முறை முதல்வராக இருந்துள்ளேன் அதுவே எனக்கு திருப்தியாக உள்ளது. என் பெயரை கெடுக்கவே தினகரன் இதுபோன்ற சதியை செய்துள்ளார்.

    சின்னத்தனமான அரசியல்

    சின்னத்தனமான அரசியல்

    அரசியல் நாகரீகம் தெரியாத அநாகரீகமானவர் தினகரன். மனம் திருந்தி நல்ல வார்த்தை சொல்லுவார் என்ற நம்பிக்கையில் தினகரனை சந்தித்தேன். ஆனால் அவர் இவ்வளவு சின்னத்தனமான அரசியலை தினகரன் செய்வார் என எதிர்பார்க்கவில்லை என ஓபிஎஸ் தெரிவித்தார்.

    English summary
    Deputy CM OPS has said, I will not dissolve the ADMK govt.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X