For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

எம்ஜிஆர் விழாவுக்கெல்லாம் நான் போக மாட்டேன்.. தினகரன் உறுதி

Google Oneindia Tamil News

சென்னை: எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழா அழைப்பிதழில் தனது பெயர் சேர்த்திருப்பது ஒரு வழக்கத்திற்காகத்தான் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் தமிழ்நாடு 50-ம்ஆண்டு பொன்விழா இன்று மாலை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெறுகிறது.

 டிடிவி தினகரன்

டிடிவி தினகரன்

இந்த விழாவின் அழைப்பிதழில் திமுக தலைவர் ஸ்டாலின், கனிமொழி மற்றும் டிடிவி தினகரன் பெயர்கள் இடம் பெற்றிருந்தன. அழைப்பிதழின் கடைசியில் மாவட்ட செயலாளர்களுக்கு கீழே டிடிவியின் பெயர் போடப்பட்டு இருக்கிறது.

[அதிமுக அரசு திருந்த வேண்டும்.. இல்லையென்றால் திருந்த வைப்பேன்.. டிராபிக் ராமசாமி அதிரடி! ]

 அரசியல் செய்யவே..

அரசியல் செய்யவே..

இதுகுறித்து கடந்த 3 தினங்களுக்கு முன்பு கருத்து சொன்ன டிடிவி தினகரன், எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாஅழைப்பிதழில் எனது பெயர் இருப்பதால் விழாவில் பங்கேற்க வேண்டிய அவசியம் இல்லை என்றார். மேலும் அழைப்பிதழில் பெயர் சேர்த்திருப்பது அரசியல் செய்வதற்காகத்தான் என்றும் கூறினார்.

 என்னை அழைத்திருப்பார்கள்

என்னை அழைத்திருப்பார்கள்

இந்நிலையில் இன்று விழா நடைபெறுவதையொட்டி செய்தியாளர்கள் மீண்டும் இதுகுறித்து டிடிவி தினகரனிடம் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு தினகரன், ஊடகங்கள்தான் இதை பெரிதாக்கி கொண்டு இருக்கின்றன. உண்மையிலேயே நான் கலந்து கொள்ள வேண்டுமென நினைத்திருந்தால் என்னை அழைத்திருப்பார்கள்.

 மாவட்ட எம்எல்ஏ

மாவட்ட எம்எல்ஏ

ஆனால் மாவட்ட எம்எல்ஏக்களை அழைக்கும் வழக்கத்தின்படிதான் இந்த அழைப்பு உள்ளது. நான் சென்னை மாவட்ட எம்எல்ஏ என்பதால் எனது பெயர் அழைப்பிதழில் உள்ளது. உண்மையிலேயே விழாவுக்கு அழைக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் நான் ஊரில் இருக்கிறேனா இல்லையா, என்பதை எல்லாம் அறிந்துதான் அழைத்திருப்பார்கள். எனவே இப்படி பெயர் சேர்ப்பது அரசியல் செய்வதற்குத்தான்" என்று கூறினார்.

English summary
I Won't participate the MGR Century Function: TTV Dinakaran
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X