For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குரங்கணி மலையில் 30 அடி பள்ளத்தில் கிடந்த 9 உடல்களும் மீட்பு

குரங்கணி பகுதியில் காட்டு தீயில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்கள் 30 அடி பள்ளத்தில் இருந்து மீட்கப்பட்டு அமரர் ஊர்தி மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படவுள்ளது.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    பற்றி எறிந்த குரங்கணி வனம் .. சிக்கிய மாணவிகள்.. வீடியோ

    தேனி: தேனி மாவட்டம் குரங்கணி பகுதியில் காட்டுத் தீயில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்கள் 30 அடி பள்ளத்தில் இருந்து மீட்கப்பட்டுவிட்டது.

    தேனி மாவட்டம் குரங்கணி காட்டு பகுதிக்கு மலையேற்ற பயிற்சிக்கு இரு குழுக்களாக 36 பேர் சென்றனர். ஒரு குழுவில் 24 பேரும் மற்றொரு குழுவில் 12 பேரும் சென்றிருந்தனர்.

    IAF Helicopter retrieves the body of the deceased

    இவர்கள் அனைவரும் நேற்ற நடந்த காட்டு தீயில் சிக்கினர். அவர்களுள் 9 பேர் பலியாகிவிட்டனர். இவர்களில் 6 பேர் பெண்கள். காட்டு தீ ஏற்பட்ட போது ஆங்காங்கே சிதறி ஓடியதில் சிலர் 30 அடி ஆழ பள்ளத்தில் விழுந்தனர்.

    இவர்களில் முதலில் விபின் உடல் டோலி மூலம் மீட்கப்பட்டுவிட்டது. இதைத் தொடர்ந்து 30 அடி ஆழ பள்ளத்தில் உள்ள 8 பேரின் உடல்களை மீட்பதில் தொய்வு ஏற்பட்டது. பின்னர் 9 பேரின் உடல்களும் மீட்கப்பட்டுவிட்டன.

    இவை அமரர் ஊர்தி வாகனம் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு ,அங்கு பிரேத பரிசோதனை நடத்தப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும்.

    English summary
    There was some difficulties to retrieve the bodies of those who died in Theni fire accident because they are trapped in 30 feet depth. But All the deceased bodies were recovered by IAF Helicopter.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X