For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

என்னா ஐசிசி!: நிறத்துக்கேற்ப தண்டனையா? : பொங்கும் நெட்டிசன்கள்

நிறத்துகேற்ப ஐசிசி தண்டனை வழங்குவதாக நெட்டிசன்கள் பொங்குகின்றனர்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    ஆஸிக்கு ஒரு நியாயம்! எங்களுக்கு ஒரு நியாயமா?..சூடான 'பஜ்ஜி'- வீடியோ

    சென்னை: பந்து சேதப்படுத்தப்பட்ட விவகாரத்தில் நிறத்துக்கேற்ப விதவிதமான தண்டனைகளை வழங்குவதாக நெட்டிசன்கள் பொங்குகின்றனர்.

    தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பந்தை பேன் கிராஃப்ட் சேதப்படுத்தினார். இது தொடர்பான காட்சிகள் கேமராவில் பதிவாகின. இதுகுறித்து தகவலறிந்த ஐசிசி அணியின் கேப்டன் ஸ்மித்தையும், துணை கேப்டன் வார்னரையும் அப்பதவியிலிருந்து நீக்கியது.

    எனினும் பேன்கிராஃப்ட்டுக்கு எந்தவித தண்டனையும் கொடுக்கவில்லை. இதுதொடர்பாக வலைஞர் ஒருவர் பழைய கால சம்பவங்களை பட்டியலிட்டு நிறத்துக்கு ஏற்ப தண்டனை வழங்கப்படுவது ஏன் என்பதை ஐசிசி தெளிவுப்படுத்த வேண்டும் என்று கேட்டுள்ளார்.

    • அதில் 1994-இல் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் ஆர்தர்டன் பந்தை அழுக்காக்கினார். அதற்கு அவர் மீது நடவடிக்கை இல்லை, கேப்டனாகவே தொடர்ந்தார்.
    • 2000-ஆம் ஆண்டு பாக். பந்துவீச்சாளர் வக்கார் யூனிஸ் பந்தை சேதப்படுத்தினார். அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது.
    • 2001-ஆம் ஆண்டு சச்சின் டெண்டுல்கரும் பந்தை சேதப்படுத்தினார். அவர் ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டது.
    • 2004-ஆம் ஆண்டு ராகுல் டிராவிட் பந்தின் ஒரு பகுதியை மருந்தில் தேய்த்தார். அவருக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.
    • 2010-ஆம் ஆண்டு இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் பிராட் மற்றும் ஆண்டர்சன் ஆகியோர் பந்தை சேதப்படுத்தினர். ஆனால் எந்த வித தண்டனையும் இல்லை.
    • அதே ஆண்டு பாக். வீரர் சயித் அஃபிரடி பந்தை கடித்த காட்சிகள் கேமராவில் பதிவானது. அவர் இரு 20- 20 போட்டிகளில் விளையாட அனுமதிக்கப்படவில்லை.
    • 2012-ஆம் ஆண்டு ஆஸி பந்து வீச்சாளர் சிடில் பந்தின் மடிப்பு பகுதிகளை சேதப்படுத்தியதாக இலங்கை குற்றம்சாட்டியது. அந்த பிரச்சினை ஐசிசியால் சரி செய்யப்பட்டது.
    • 2013-ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவின் டூ பிளஸ்ஸில் பந்தை சேதப்படுத்தியதற்கு அபராதம் விதிக்கப்பட்டது.
    • 2014-ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவின் பிலாண்டர் பந்தில் சிராய்ப்பை ஏற்படுத்தியதற்காக அபராதம் விதிக்கப்பட்டது என்று நெட்டிசன் பட்டியலிட்டுள்ளார்.

    English summary
    Netisans gets angry over ball tampering issue and ICC's action. They ask ICC needs to clarify. Why are there different punishments when a white man does it than when a brown man does it?
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X