For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கிரிக்கெட் விதிகளை ஐசிசி மாற்ற காரணம் இதுதானா?

கிரிக்கெட் விளையாட்டில் ரசிகர்களின் ஆர்வம் குறைவதன் எதிரொலியாகவே ஐசிசி விளையாட்டு முறையில் மாற்றம் கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது.

By Gajalakshmi
Google Oneindia Tamil News

Recommended Video

    கிரிக்கெட்டில் அதிரடி விதிமுறைகளை அறிவித்தது ஐசிசி - வீடியோ

    சென்னை : சர்வதேச கிரிக்கெட்டில் மேலும் சுவாரஸ்யத்தை கூட்டும் விதமாக புதி யவிதிமுறைகளை நாளை முதல் கொண்டு வர ஐசிசி திட்டமிட்டுள்ளது.

    ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்திருக்கும் கிரிக்கெட் விளையாட்டில் மேலும் சுவாரஸ்கத்தை கூட்டும் விதமாக விதிமுறைகளில் புதிய மாற்றங்களை கொண்டு வர சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் முடிவு செய்துள்ளது. இந்த விதிமுறைகள் மாற்றம் நாளை முதல் அமலுக்கு வருகிறது.

    இதன்படி பேட்ஸ்மேன் அடிக்கும் ஷாட்டை பவுண்டரி அருகே தாவி குதித்து கேட்ச் செய்ய முயலும் போது பீல்டரின் கால்கள் கட்டாயம் பவுண்டரி லைனிற்கு உள்ளே இருக்க வேண்டும். நீண்ட தூரம் ஓடி வந்து ஜம்ப் செய்து கேட்ச் செய்தால் (எல்லைக் கோட்டிற்கு வெளியே) அது அவுட்டாக கருதப்படாமல், பவுண்டரி என கணக்கில் கொள்ளப்பட உள்ளது.

     பேட்ஸ்மேனுக்கு நற்செய்தி

    பேட்ஸ்மேனுக்கு நற்செய்தி

    இதே போன்று கிரீசிற்குள் வந்து பேட்ஸ்மேன் தொட்ட பிறகு பேட் நழுவி ஸ்டம்ப்பை தாக்கும் பட்சத்தில் அது ரன் அவுட்டாக அறிவிக்கப்பட்டது. ஆனால் நாளை முதல் ஒரு முறை பேட்ஸ்மேன் கிரீசிற்குள் வந்துவிட்டால் அதன் பிறகு பேட் அந்தரத்தில் இருந்தாலும் இனி ரன் அவும் செய்ய முடியாது, ஸ்டம்பிங்கிற்கும் இந்த விதி பொருந்தும்.

     பேட் அளவிலும் மாற்றம்

    பேட் அளவிலும் மாற்றம்

    டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒவ்வொரு அணியும் தலா 6 மாற்று ஆட்டக்காரர்களை அறிவிக்கலாம், இதற்கு முன்னர் 4 வீரர்கள் அறிவிக்கப்படுகின்றனர். பேட்டின் அளவுகளில் குறிப்பிட்ட கட்டுப்பாடுகளும் கொண்டு வரப்படுகின்றன. பேட்டின் நீளம், அகலங்களில் மாற்றம் இல்லை. ஆனால் பேட் விளம்பின் தடிமன் 40 மி.மீ தாண்டி இருக்கக் கூடாது, ஒட்டுமொத்த பேட்டின் தடிமன் 67 மி.மீ மேல் இருக்கக் கூடாது என்றும் கட்டுப்பாடுகள் கொண்டு வரப்படுகின்றன.

     ரெட் கார்டு

    ரெட் கார்டு

    வீரர்களின் நடத்தை விதிமுறை மேலும் கடுமையாக்கப்படுகிறது. களத்தில் மூர்க்கத்தனமாக நடந்து கொள்ளும் வீரர்கள் கால்பந்து போட்டியில் ரெட் கார்ட் காட்டி வெளியேற்றப்படுவது போல நடுவரால் வெளியேற்றப்படும் அதிகாரமும் வழங்கப்பட உள்ளது. மேலும் நடுவரை மிரட்டுவது, வீரர்களுடன் மோதலில் ஈடுபடுவது ஆகியவற்றை லெவல் 4 வகை குற்றமாகக் கருதி வீரரை வெளியேற்ற முடியும்.

     குறையும் ரசிகர்களை ஈர்க்க

    குறையும் ரசிகர்களை ஈர்க்க

    இது போன்று வேறு சில விதிகைளையும் ஐசிசி வகுத்துள்ளது. விளையாட்டு என்றால் அதில் கிரிக்கெட்டிற்கு தனி மவுசு இருந்த நிலையில் தற்போது கபடி, பேட்மிண்டன், கால்பந்து உள்ளிட்ட விளையாட்டுகளுக்கு பெரிய அளவில் ரசிகர்கள் உருவாகி வருகின்றனர். எனவே கிரிக்கெட் மவுசு குறைவதைக் கருத்தில் கொண்டே இந்த மாற்றங்கள் கொண்டு வரப்படுவதாகவும் கூறப்படுகிறது.

    English summary
    ICC's several playing conditions that will come into effect for all international series beginning from September 28, 2017 to increase the cricket fans interest in the matches.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X