For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சூரியனுக்கு 144 தடையுத்தரவு, அணை மீது பந்தல்.. நீராவியை தடுக்க அமைச்சருக்கு ஐடியா தரலாம் வாங்க!

நீர் ஆவியாதலை தடுக்க தெர்மாக்கோல் போட்டு நகைச்சுவைக்கு ஆளான அமைச்சர் செல்லூர் ராஜுவுக்கு நம்மால் முடிந்த நல்ல யோசனைகளை தெரிவிப்போம்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

சென்னை: நீர் ஆவியாதலை தடுக்க தெர்மாக்கோல் ஷீட்டுகளை மிதக்கப்பட்டு தமிழக மானத்தை கப்பலை ஏற்றிய அமைச்சர் செல்லூர் ராஜுவுக்கு நம்மால் இயன்ற ஆலோசனைகளை வழங்கலாமே.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே அமைந்துள்ளது வைகை அணை. இந்த அணையின் தண்ணீர் மதுரை, தேனி மாவட்டங்களின் கூட்டுக்குடிநீர் திட்டங்களுக்கு பயன் படுகிறது. பருவமழை பொய்த்துப் போனதால் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. தற்போது அணை நீர்மட்டம் 23.10 அடி மட்டுமே உள்ளது. இதே தேதியில் கடந்த ஆண்டு இந்த அணையின் நீர் மட்டம் 35 அடியாக இருந்தது. எனவே தண்ணீர் தேவையை கருத்தில் கொண்டு இன்று காலை அந்த அணைக்கு அதிகாரிகளுடன் சென்றார் அமைச்சர் செல்லூர் ராஜு.

லேசாக உள்ள தெர்மாக்கோல் அட்டைகள் காற்றடித்தால் பறந்து விடும். மேலும் தண்ணீரில் ஊறினால் உடைந்து சிதைந்து விடும் என்பது பள்ளி மாணவர்களுக்கு கூட தெரியும். ஆனால் ஒரு ஆர்வக் கோளாறில் தெர்மாகோல் ஷீட்டுகளை ஒன்றிணைத்து மிதக்க விட்டார். அதுதான் தாமதம், அடித்த காற்றில் 10 விநாடிக்குள் தெர்மாகோல் அட்டைகள் முழுவதும் கரை ஒதுங்கின. அட்டர் பிளாப் ஆன இந்த பிளானால் செல்லூர் ராஜுவை வைத்து மீம்ஸ்கள் தயார் செய்து வருகின்றனர்.

 ஷாமியானா

ஷாமியானா

அணைக்கு மேல் சீலிங் கட்டி விடலாம். தார்பாயைக் கொண்டு சூரியனை மூடிவிடலாம்.கட்சியில் ஒரு ரவுண்ட் வலம் வருவதற்காக கரை வேட்டிகளை வாங்கிக் குவித்த தினகரனுக்கு இனி அவை தேவைப்படாது என்பதால் அவற்றை பெற்று பந்தல் போல் கட்டி விடலாம். வெள்ளை நிறத்தில் வெயில் பட்டால் உள்ளிழுக்காது.

 கரை வேட்டி

கரை வேட்டி

அணைக்கு மேல் சீலிங் கட்டி விடலாம். தார்பாயைக் கொண்டு சூரியனை மூடிவிடலாம்.கட்சியில் ஒரு ரவுண்ட் வலம் வருவதற்காக கரை வேட்டிகளை வாங்கிக் குவித்த தினகரனுக்கு இனி அவை தேவைப்படாது என்பதால் அவற்றை பெற்று பந்தல் போல் கட்டி விடலாம். வெள்ளை நிறத்தில் வெயில் பட்டால் உள்ளிழுக்காது.

 ஒன்றரை கோடி

ஒன்றரை கோடி

அதிமுக இணைப்புக்கு முத்தாய்ப்பாக அனைத்து அமைச்சர்களும், நிர்வாகிகளும் சேர்ந்து குடை பிடித்து வெயிலை தடுக்கலாம், இல்லையெனில் 1.5 கோடி தொண்டர்களுடன் சேர்ந்து சூரியனை கையால் மறைத்து, சூரியனை கையால் மறைப்பர் உளரோ என்ற கூற்றை மெய்ப்பிக்கலாம்.

 ஷிப்ட் பண்ணலாம்

ஷிப்ட் பண்ணலாம்

ஹிஸ்டரி சேனலில் காண்பிப்பது போல் வெளிநாடுகளில் வீடுகளை அலேக்காக தூக்கிக் கொண்டு செல்லும் மிஷினை வரவழைத்தோ அல்லது மானிய விலையில் வாங்கியோ அவற்றை கொண்டு வைகை அணையை நிழலான பகுதிக்கு ஷிப்ட் செய்யலாம்.

 சண்டை மூட்டலாம்

சண்டை மூட்டலாம்

வருண பகவானின் மகளான நீரை சூரியன் கவர்ந்து செல்வதால் வருணனுக்கும், சூரியனுக்கும் இடையே சண்டையை உருவாக்கலாம். ரப்பர் பந்துகளை போடுவதற்கு முன்னர், கேரள வேளாண் அலுவலகத்தில் இருந்து ரப்பர் செடிகளை வாங்கிக் கொண்டு அதை ஆற்றில் நட்டுவைக்கலாம்.தெர்மாகோலால் செய்யப்பட்ட படகுகளை மிதக்கவிடலாம்.

 144 தடை உத்தரவு

144 தடை உத்தரவு

இந்தப் பகுதியில் நீர் ஆவியாதல் தடை செய்யப்பட்டுள்ளதாக போர்டு வைத்து 144 போன்ற தடை உத்தரவை சூரியனுக்கு பிறப்பிக்கலாம். பள்ளிகளுக்கு லீவு விட்டமாதிரி வெயிலுக்கும் லீவு விட்டு அமைச்சர் செங்கோட்டையனும் அருள்புரிய வேண்டும். அப்படியும் அடங்காத, தமிழக மக்களின் வயிற்றெரிச்சலை கொட்டிக்கு கொள்ளும் சூரியனை எமதர்மராஜனிடம் சொல்லி எண்ணெய் கொப்பரையில் போட்டு வறுத்தெடுக்க சட்டசபையில் தீர்மானம் பாஸ் செய்யலாம். விஞ்ஞானி செல்லூர் ராஜுவுக்கு தெரியாத ஐடியாவா என்று நீங்கள் கேட்பது புரிகிறது. ஆனால் அவருக்கு நம் பங்குக்கு ஏதாவது ஐடியா கொடுத்தால் ஒத்தாசையாக இருக்குமே அதாங்க...

English summary
How to prevent Evaportaion other than spreading thermocols? Ideas are given.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X