For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பிளாஸ்டிக் அரிசியை விடுங்க.. பிளாஸ்டிக் கப்பில் இட்லி அவிக்கிற அநியாயத்தைப் பார்த்தீங்களா!

கல்யாண வீடுகளிலும், ஹோட்டல்களிலும் இட்லியை பிளாஸ்டிக் பேப்பர்களிலும், கப்புகளிலும் அவிப்பதாக வீடியோ ஆதாரத்துடன் தகவல் பரவி வருகிறது.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

சென்னை: இட்லி என்பது ஜீரணத்துக்கு உகந்த உணவு என்பதால் குழந்தைகள், பெரியவர்கள், நோயாளிகள் என இட்லியை உண்ண மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

அதிலும் இட்லி தட்டுகளில் எண்ணெய் தடவாமல் இட்லியை அவிக்க பெரும்பாலும் வீடுகள், ஹோட்டல்கள், திருமண மண்டபங்களில் பெரிய துணியை பயன்படுத்தி அதில் இட்லியை வார்ப்பர்.

Idlies are boiled in Plastic cups

இட்லி தட்டுகளையும் தேய்க்காமல், தண்ணீர் பஞ்சத்தை சமாளிக்க இட்லி துணியை தோய்க்காமல் நோகாமல் நோன்பு கும்பிட இவர்களெல்லாம் ரூம் போட்டு யோசித்திருப்பார்கள் போல.

பிளாஸ்டிக் பைகளை உபயோகப்படுத்தினாலே அது உடல்நலத்துக்கு கேடு தரும் என்று அரசு கூறுகிறது. இந்த லட்சணத்தில் பிளாஸ்டிக் அரிசி பீதி வேறு. ஆனால் இந்த வீடியோவில் ஒரு கல்யாண வீட்டில் பிளாஸ்டிக் கப்புகளில் இட்லியை அவிக்கின்றனர். இதை நீங்களே பாருங்க....

English summary
This video shows that how idlies are cooked using plastic cups.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X