For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'பணப்பட்டுவாடா' வேட்பாளர்கள் போட்டியிட தேர்தல் ஆணையமே ஏன் தடை விதிக்கக் கூடாது? உயர்நீதிமன்றம்

பணப்பட்டுவாடா புகாரில் சிக்கும் வேட்பாளர்களுக்கு தேர்தல் ஆணையமே ஏன் தடை விதிக்கக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: பணப்பட்டுவாடா புகாரில் சிக்கிய வேட்பாளர்கள் போட்டியிட தேர்தல் ஆணையமே ஏன் தடை விதிக்கக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தொகுதிகளுக்கு மறுதேர்தல் நடைபெற உள்ளது. சட்டசபை தேர்தலின் போது பணப்பட்டுவாடா புகாரால் 2 தொகுதிகளின் தேர்தல் ரத்து செய்யப்பட்டது.

If Chargsheet files Candidate will disqualify, says EC

தற்போது பணப்பட்டுவாடா புகாருக்கு உள்ளான திமுக, அதிமுக வேட்பாளர்களே மீண்டும் களமிறங்கியுள்ளனர். இதனால் இந்த வேட்பாளர்களுக்கு தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநலன் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

இவ்வழக்கின் இன்றைய விசாரணையின் போது, பணப்பட்டுவாடா புகார்களுக்கு உள்ளான வேட்பாளர்களுக்கு ஏன் தேர்தல் ஆணையமே தடை விதிக்கக் கூடாது என்று கேள்வி எழுப்பியது. ஆனால் இதற்கு பதிலளித்த தேர்தல் ஆணையமோ, இப்படி புகாரில் சிக்கிய வேட்பாளர்களுக்கு தடை விதிக்க எங்களுக்கு அதிகாரம் இல்லை.

ஒருவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தாலே அவர் தேர்தலில் போட்டியிடுவதற்கு தடை விதிப்பது தொடர்பாக பரிசீலிக்கப்படும் என விளக்கம் அளித்தது.

English summary
The Election Commission told Madras High Court that EC considering if Chargsheet files those persons will not contes any elections.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X