For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எம்.எல்.ஏக்கள் சொந்த ஊருக்கு போனா மக்கள் சும்மா விடமாட்டாங்க... நடிகர் பாக்கியராஜ் எச்சரிக்கை

எம்எல்ஏக்கள் சொந்த ஊர் சென்றால் மக்களின் அதிருப்தியை எதிர்கொள்ள நேரிடும் என நடிகர் பாக்கியராஜ் தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: சட்டத்துக்கும் நியாய தர்மத்துக்கும் இடையே தற்போது போட்டி நடைபெறுவதாக நடிகர் பாக்கியராஜ் தெரிவித்துள்ளார். எம்எல்ஏக்கள் சொந்த ஊர் சென்றால் மக்களின் அதிருப்தியை எதிர்கொள்ள நேரிடும் என அவர் கூறியுள்ளார்.

தமிழக அரசியலில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக குழப்பத்துக்கும் பரபரப்புக்கும் பஞ்சமில்லாமல் உள்ளது. தமிழக அரசியல் களத்தில் ஏற்படும் அடுத்தடுத்த திருப்பங்களை நாடு முழுவதும் உற்றுப்பார்த்து வருகிறது.

தமிழகம் முழுவதும் சசிகலா தரப்புக்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதேநேரத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவும் தெரிவித்து வருகின்றனர். எம்ஜிஆரால் உருவாக்கப்பட்ட கட்சியை சசிகலா தனது குடும்ப சொத்தகா மாற்ற முயற்சிப்பதும் தமிழக மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுக பிளவுக்கு காரணம் யார்?

அதிமுக பிளவுக்கு காரணம் யார்?

இந்நிலையில் எம்ஜிஆரில் சினிமா வாரிசும் நடிகருமான நடிகர் பாக்கியராஜ் தமிழக அரசியல் நிலவர்ம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். அவர் கூறியதாவது, "அதிமுக பிளவுப்பட்டது யாரால் என்பது மக்களுக்கு தெரியும்.

பொதுக்குழுவை கூட்டியிருக்க வேண்டும்

பொதுக்குழுவை கூட்டியிருக்க வேண்டும்

கட்சியின் பொதுக்குழுவைக் கூட்டி முடிவு எடுங்கள் என்று ஆளுநர் கூறியிருக்க வேண்டும். பன்னீர்செல்வத்தை நீக்கிவிட்டு சசிகலா முதல்வராக முயன்றபோதுதான் அதிமுகவில் பிரச்சனை எழுந்தது.

ஓபிஎஸை கட்டாயப்படுத்தியதில் நியாயமில்லை

ஓபிஎஸை கட்டாயப்படுத்தியதில் நியாயமில்லை

130 எம்.எல்.ஏக்கள் ஆதரவுடன் தேர்ந்து எடுக்கப்பட்டவர்தான் பன்னீர்செல்வம். தவறே செய்யாமல் அவரை விலகக் கட்டாயப்படுத்தியது நியாயமில்லை என மக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

சரியில்லாதவர்களை நீக்குங்கள்

சரியில்லாதவர்களை நீக்குங்கள்

சரியில்லாத நபர்களை நீக்குவதை விட்டுவிட்டு தேர்தல் நடத்த மக்கள் பணத்தை செலவழிக்க கூடாது. சமூக ஊடகங்களில் எம்.எல்.ஏக்களை கடுமையாக விமர்சித்து மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மக்கள் சும்மா விடமாட்டங்க

மக்கள் சும்மா விடமாட்டங்க

எம்.எல்.ஏக்கள் சொந்த ஊர் சென்றால் மக்களின் அதிருப்தியை எதிர்கொள்ள நேரிடும். ஜெயலலிதா வேண்டாம் என ஒதுக்கியவர்களுக்கு பதவி அளித்துள்ளார் சசிகலா.

குடும்பத்தினரை நியமித்ததால் எரிச்சல்

குடும்பத்தினரை நியமித்ததால் எரிச்சல்

டிடிவி தினகரனை கட்சி பொறுப்பில் சசிகலா நியமித்ததே மக்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது. சட்டத்துக்கும் நியாய தர்மத்துக்கும் இடையே தற்போது போட்டி நடைபெறுகிறது" இவ்வாறு நடிகர் பாக்கியராஜ் தெரிவித்துள்ளார்.

English summary
Actor Bhakkiyaraj talks about the tamilnadu political stiuation. He tols that the competition now takes place between law and moral philosophy. and he said that if MLAs goes hometown they wil face the discontent of the public.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X