For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஒரு கதவு மூடினால் மறு கதவு திறக்கும்: மாணவர்கள் கோழைத்தனமான முடிவை எடுக்கக்கூடாது.. விஜயகாந்த்

ஒரு கதவு மூடினால் மறு கதவு திறக்கும் என்பதால் மாணவர்கள் கோழைத்தனமான முடிவை எடுக்கக் கூடாது என்று தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவன தலைவரும் பொதுச் செயலாளருமான விஜயகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: ஒரு கதவு மூடினால் மறு கதவு திறக்கும் என்பதால் மாணவர்கள் கோழைத்தனமான முடிவை எடுக்கக் கூடாது என்று தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவன தலைவரும் பொதுச் செயலாளருமான விஜயகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நீட் தேர்வு முடிவுகள் நேற்று முன்கூட்டியே வெளியானது. இதில் தமிழகத்தில் இருந்து 40 சதவீத மாணவ மாணவிகள் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.

If one door is closed another door will be opened: Vijayakanth

இந்நிலையில் நீட் தேர்வில் தோல்வியடைந்த விழுப்புரம் மாவட்டம் பெருவளூரைச் சேர்ந்த மாணவி பிரதீபா நேற்றிரவு எலி மருந்தை உட்கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.

அவரது மரணத்திற்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தேமுதிக தலைவரும் பொதுச்செயலாளருமான விஜயகாந்த் இதுதொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் ஒரு கதவு மூடினால் மறு கதவு திறக்கும் என்பதால் மாணவர்கள் கோழைத்தனமான முடிவை எடுக்கக் கூடாது. எல்லாவற்றுக்கும் மாற்றுவழி உள்ளது என்பதை சிந்தித்து எதிர்காலத்தை தைரியமாக எதிர்கொள்ள வேண்டும்.

தமிழக மாணவ, மாணவிகள் நீட் தேர்வு எழுதும் வகையில் பயிற்சி மையங்களை அதிகப்படுத்த வேண்டும். இவ்வாறு விஜயகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

English summary
If one door is closed another door will be opened Students do not take Cowardly decisions says DMDK leader Vijayakanth.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X