For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

8 வழிச்சாலை அமைந்ததும் பிடிக்காட்டி பூட்டு போட்டு பூட்டிரலாம்- "உதயமாகும்" இன்னொரு செல்லூரார்!

8 வழிச்சாலை அமைந்ததும் மக்களுக்கு பிடிக்காவிட்டால் பூட்டு போட்டு விடலாம் என்று அமைச்சர் ஆர்பி உதயகுமார் தெரிவித்தார்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

சென்னை: 8 வழிச்சாலை அமைந்ததும் மக்களுக்கு பிடிக்காவிட்டால் பூட்டு போட்டு விடலாம் என்று அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்தார்.

சென்னை- சேலம் இடையே 8 வழிச்சாலை திட்டம் போடப்படவுள்ளது. இதற்காக விவசாய நிலங்கள், வீடுகள் என மக்களின் விருப்பதிற்கு மாறாக அரசாங்கம் நிலங்களை கையகப்படுத்தி வருகின்றன.

If the people dont like 8 lane project after it established

8 வழிச்சாலைக்கு எதிராக போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன. இதில் பலர் கைது செய்யப்படும் சம்பவங்களும் நடைபெற்று வருகின்றன. காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் மாவட்டங்கள் வழியாக 277 கி.மீ. தூரம் அமைய இருக்கும் இந்த விரைவுச்சாலை திட்டத்துக்காக மத்திய அரசு ரூ.10 ஆயிரம் கோடி ஒதுக்கி இருக்கிறது.

இந்நிலையில் இந்த திட்டம் குறித்து அமைச்சர் ஆர்பி உதயகுமார் கூறுகையில் சென்னை- சேலம் இடையே அமையவுள்ள திட்டம் மிகவும் நல்ல திட்டமாகும். இந்த திட்டம் அமைந்தவுடன் மக்கள் அதன் நன்மை தீமைகளை பார்க்க வேண்டும்.

அப்படியும் மக்களுக்கு பிடிக்காவிட்டால் சாலையை பூட்டு போட்டு பூட்டிவிடுவோம் என்று தெரிவித்துள்ளார். இதனால் விவசாயிகள், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அனைவரின் எதிர்ப்பையும் மீறி வாழ்வாதாரத்தை அழித்துவிட்டு ரூ. 10 ஆயிரம் கோடி செலவு செய்து அதை பூட்டு போட்டு விடலாம் என்று அமைச்சர் அசால்ட்டாக கூறுவதை வேதனையுடன் தெரிவித்தனர்.

English summary
Minister R.B.Udhayakumar says that if people dont like the 8 lane project between Chennai and Salem after it established, we may lock the road.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X