For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

போற போக்கை பார்த்தால் அதிமுகவுக்கும் அழகிரிக்கும் கூட்டணி வந்துரும் போலயே!!!

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

சென்னை: தமிழக அரசியலில் என்ன வேண்டுமானாலும் நடக்கும். நடக்கக் கூடாததும் நடக்கும், எதிர்பாராததும் நடக்கும். அந்த வகையில் தற்போது போகிற போக்கைப் பார்த்தால் அதிமுகவுக்கும் அழகிரிக்கும் இடையே கூட கூட்டணி வந்து விடும் போல.

ஜெயலலிதா, கருணாநிதி ஆகிய இரு ஜாம்பவான்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு முக்கிய இடைத்தேர்தலையும் பொதுத் தேர்தலையும் தமிழகம் சந்திக்கவுள்ளது. இந்த சூழலில் மக்களின் செல்வாக்கு யாருக்கு என்பதில் அரசியல் கட்சியினர் முனைப்பு காட்டி வருகின்றனர்.

ஒரு காலத்தில் பம்மிக் கொண்டு சினிமாவோடு நின்றிருந்த ரஜினி, கமல், விஷால் எல்லாம் தற்போது அரசியல் பேச ஆரம்பித்துள்ளனர். இவர்களைப் பார்த்து மேலும் பலரும் பேசக் காத்துள்ளனர்.

கட்சிகள் குற்றச்சாட்டு

கட்சிகள் குற்றச்சாட்டு

இந்த நிலையில் ஏற்கனவே நெருக்கமாக இரு கட்சிகளுக்கு இடையே மனஸ்தாபம் கூடி வருவதாக தெரிகிறது. அதாவது அதிமுக, பாஜக இடையேதான். பாஜக சொல்படிதான் அதிமுக ஆட்சி நடப்பதாக பேச்சு உள்ள நிலையில் இரு தரப்பும் மாறி மாறி தற்போது குற்றம் சாட்ட ஆரம்பித்துள்ளன.

கூட்டணி உருவாகும்

கூட்டணி உருவாகும்

பாஜகவின் பார்வை தற்போது திமுக பக்கம் திரும்பியுள்ளதாக சொல்கிறார்கள். கருணாநிதியை மோடி கோபாலபுரம் வீட்டில் வந்து சந்தித்தது முதல் பல்வேறு நிகழ்வுகளை கோடிட்டுக் காட்டி இதை சிலர் பேசி வருகின்றனர்.

திமுக தலைவர்

திமுக தலைவர்

அதே போல் கருணாநிதியின் இரங்கல் கூட்டத்துக்கு அமித்ஷா வருவதாக இருந்தது. இதற்கும் இப்படித்தான் என்று முடிச்சுகள் போடப்பட்டன. எனினும் மதவாத கட்சிகள் என்றும் காவி கட்சி என்றும் திமுக தலைவராக பதவியேற்ற ஸ்டாலின் விமர்சனம் செய்தார்.

இருட்டடிப்பு

இருட்டடிப்பு

ஆனால் தற்போது அதிமுக தரப்பில் தம்பிதுரை வேறு மாதிரியாக பேசி வருகிறார். அழகிரி பேரணியை தடுக்கவே அமைச்சர் மற்றும் அதிகாரிகளின் வீடுகளில் சிபிஐ ரெய்டு நடந்ததாக லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை குற்றம்சாட்டியுள்ளார். திமுகவுக்கும்- பாஜகவுக்கும் கூட்டணி உள்ளது. எங்களுக்கும் பாஜகவுக்கும் அல்ல என்றும் கூறியுள்ளார்.

கூட்டணி யாருடன்

கூட்டணி யாருடன்

திமுகவில் தன்னை மீண்டும் இணைத்து கொள்ளுமாறு அழகிரி கெஞ்சியும் மிரட்டியும் பார்த்தும் ஒன்றும் நடக்கவில்லை. இதனால் திமுகவின் வாக்குகளை பிரிப்பதற்காகவும், திமுக வெற்றி பெற கூடாது என்பதற்காகவும் அழகிரி புதிய கட்சியை தொடங்கினாலும் தொடங்குவார். ஏற்கெனவே அவரது ஆதரவாளர்கள் புதிய கட்சிக்கு பெயரையும் கொடியையும் ரெடி செய்து விட்டனர்.

வரலாம் வா

வரலாம் வா

அதிமுகவை பொருத்த மட்டில் தங்கள் தலைமையை ஏற்க விரும்பும் கட்சிகள் கூட்டணிக்காக தங்களை அணுகலாம் என அமைச்சர்கள் தெரிவித்து விட்டனர். திமுகவுக்கும் அழகிரிக்கும் பெரும் மோதலை ஏற்படுத்தி விரிசலை பெரிதாக்க அதிமுக பிளான் செய்து அழகிரியுடன் கூட்டணி அமைக்கவும் வாய்ப்பிருக்கிறது என்று அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். இதற்காகவே அழகிரியின் பேரணிக்காக ரெய்டு என்று பெரிய ஐஸை அவர் தலையில் வைப்பதாகவும் கூறப்படுகிறது. பார்ப்போம் என்ன நடக்கிறதென்று...!

ஏமாறப் போவது அழகிரியா, அதிமுகவா, திமுகவா அல்லது வழக்கம் போல மக்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்!

English summary
An alliance between ADMK and Alagiri will be formed?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X