For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

108க்கு போன் செய்தும் கண் தானம் செய்யலாம்- அமைச்சர்

Google Oneindia Tamil News

சென்னை: கண் தானம் செய்ய விரும்பினால் இறந்தவர்களின் உறவினர்கள் 108 இலவச ஆம்புலன்சுக்கு போன் மூலம் தகவல் கொடுக்கலாம் என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்துள்ளார்.

108 இலவச ஆம்புலன்ஸ் சேவையின் 5ம் ஆண்டு நிறைவு விழா சென்னையில் நடைபெற்றது. ஜிவிகே நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பி.என்.ஸ்ரீதர் வரவேற்றார். சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், சுகாதார திட்ட இயக்குனர் பங்கஜ் குமார், சென்னை மருத்துவ கல்லூரி முதல்வர் கனகசபை ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.

108 Ambulance

அமைச்சர் கே.சி.வீரமணி விழாவுக்கு தலைமை வகித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில்,தமிழகத்தில் 2008ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15ம் தேதி 108 இலவச ஆம்புலன்ஸ் சேவை 20 ஆம்புலன்சுடன் தொடங்கப்பட்டது.

தற்போது தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களில் 629 ஆம்புலன்ஸ் வாகனம் உள்ளது. 108 இலவச ஆம்புலன்ஸ் மூலம் கடந்த 5 ஆண்டுகளில், 23,46,048 பேர் பயன் அடைந்துள்ளனர்.

கண் தானம் குறித்தும் 108 ஆம்புலன்ஸ் சேவை நிறுவனம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. பொதுமக்களும், தங்கள் உறவினர்கள் இறந்து விட்டால், அவர்களது கண்களை தானம் செய்ய விரும்பினால் 108 ஆம்புலன்சுக்கு போன் செய்யலாம். அவர்கள், கண்களை தானம் பெற்று செல்வதற்கான உடனடி நடவடிக்கை எடுக்க உதவி செய்வார்கள் என்றார் அமைச்சர்.

English summary
People can donate their eyes through 108 fee ambulance service, said health Minister K C Veeamani.
 
 If you want to donate your eyes, call 108: Minister
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X