For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சர்ச்சைக்குரிய தூத்துக்குடி இன்ஸ்பெக்டர்கள் ஹரிகரன், வனிதா அதிரடி இடமாற்றம்!

தூத்துக்குடி இன்ஸ்பெக்டர்கள் ஹரிகரன், வனிதா இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Google Oneindia Tamil News

தூத்துக்குடி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிப்காட் காவல் ஆய்வாளர் ஹரிகரன் மற்றும் இவரது மனைவி தாளமுத்துநகர் காவல் ஆய்வாளர் வனிதா ஆகியோரை மதுரை மண்டலத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவினை மதுரை தென் மண்டல ஐஜி சைலேந்திர யாதவ் பிறப்பித்துள்ளார்.

துப்பாக்கிச் சூடு விவகாரம் தமிழகம் முழுக்க மிகப் பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியது. துப்பாக்கிச் சூட்டுக்கு அனுமதி அளித்தது யார் என்ற கேள்வி எல்லோராலும் எழுப்பப்பட்டு நிலையில், தனி

துப்பாக்கி சூடு நடைபெற்ற கலெக்டர் அலுவலகம் மற்றும் ஸ்டெர்லைட் ஆலை இரண்டுமே சிப்காட் காவல்நிலையத்தின்கீழ் இயங்கி வருகிறது. இங்கு கடந்த 10 வருடங்களாக இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர் ஹரிஹரன். இவர் விதிகளுக்கு மீறியும், அரசுக்கு ஆதரவாகவும் செயல்பட்டு வருவதாக கூறி, ஸ்டெர்லைட் பகுதி மக்கள் இவர் மீது கடும் அதிருப்தியில் இருந்ததாக கூறப்படுகிறது.

IG order to transfers Thoothukudi inspectors

இந்நிலையில், துப்பாக்கி சூடு சம்பவத்திலும் இவர் ஆலை, மற்றும் அரசுக்கு ஆதரவாகத்தான் செயல்பட்டிருப்பார் என்றும், ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்துவர்களின் பெயர்கள் பட்டியலை வைத்துக்கொண்டுதான் துப்பாக்கி சூட்டிற்கு உடந்தையாக இருந்திருக்கிறார், அதற்கு தங்களிடம் ஆதாரங்கள் கூட உள்ளதாகவும் பகிரங்கமாக குற்றஞ்சாட்டி வந்தனர்.

இதனிடையே தூத்துக்குடி டவுன் இன்ஸ்பெக்டரும், ஹரிஹரனின் மனைவியுமான வனிதா, துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்டவர்களின் வீடுகளுக்கு சம்பவம் நடைபெற்ற அன்றிலிருந்து தொடர்ந்து வீடுகளுக்கு சென்று வந்ததாக கூறப்படுகிறது. உயிரிழந்தோர் வீடுகளுக்கு சென்ற வனிதா, துப்பாக்கி சூட்டில் தவறுதலாக குண்டு பாய்ந்து இறந்துவிட்டதாக சொல்லி எழுதி கைழுத்து போடுமாறும் அவர்களை வற்புறுத்தி வந்ததாகவும் தகவல்கள் கசிந்தன.

ஆனால் துணை வட்டாட்சியர் சேகர், சிப்காட் ஆய்வாளர் ஹரிஹரன் உத்தரவிட்டதன்பேரிலேயே துப்பாக்கி சூடு நடந்துள்ளதாக எப்ஐஆரும் பதிவு செய்யப்பட்டதாக உறுதியான செய்திகள் வந்தன. துணை வட்டாட்சியர்களின் அதிகார வரம்பு மிகவும் குறைவு என்பது அனைவருக்கும் தெரிந்த நிலையில், துப்பாக்கி சூட்டினால் ஏற்கனவே கொதித்துபோய் இருந்த மக்களிடையே இந்த செய்தி மேலும் பல மடங்கு அதிர்ச்சியை கூட்டி அவர்களின் கொதிப்பை கூட்டியது. தனி வட்டாட்சியருக்கு துப்பாக்கிச் சூட்டிற்கு உத்தரவிடும் அளவிற்கு அதிகாரம் உள்ளதா என்று கேள்வி அனைவரையும் குழப்பி எடுத்தது.

இந்நிலையில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிப்காட் காவல் ஆய்வாளர் ஹரிகரன் மற்றும் இவரது மனைவி தாளமுத்துநகர் காவல் ஆய்வாளர் வனிதா ஆகியோரை மதுரை மண்டலத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்த உத்தரவினை மதுரை தென் மண்டல ஐஜி சைலேந்திர யாதவ் பிறப்பித்துள்ளார்.

English summary
Thoothukudi inspectors Hariharan and his wife Vanitha have been transferred. IG Shailendra Yadav issued this order.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X