For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பொன் மாணிக்கவேல் ஓரவஞ்சனை செய்கிறார்: கருப்பு ஆடுகளை கண்டுகொள்ளவில்லை.. அறநிலையத்துறை ஊழியர்கள்!

அறநிலையத்துறையில் உள்ள கருப்பு ஆடுகளை ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் கண்டுகொள்ளவில்லை என அத்துறை ஊழியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

Google Oneindia Tamil News

Recommended Video

    பொன் மாணிக்கவேல் மீது புகார் கூறும் அறநிலைய துறை ஊழியர்கள்- வீடியோ

    சென்னை: அறநிலையத்துறையில் உள்ள கருப்பு ஆடுகளை ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் கண்டுகொள்ளவில்லை என அத்துறை ஊழியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

    சிலைக்கடத்தல் வழக்கு தொடர்பாக ஐஜி பொன் மாணிக்கவேல் தலைமையிலான சிலை தடுப்பு பிரிவு காவல்துறையினர் விசாரித்து வந்தனர். ஐஜி பொன்மாணிக்கவேலின் தலைமையில் சிலை தடுப்பு பிரிவு வந்த பிறகு பல்வேறு இடங்களில் இருந்துத் கடத்தல் சிலைகள் தமிழகத்திற்கு கொண்டுவரப்பட்டன.

    அண்மையில் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் உள்ள சோமஸ்கந்தர் சிலை செய்ததில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக, இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கவிதா கைது செய்யப்பட்டார்.

    செய்தியாளர் சந்திப்பு

    செய்தியாளர் சந்திப்பு

    இந்த விவகாரத்தில் போதிய ஆதாரமின்றி கவிதா கைது செய்யப்பட்டிருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஹைகோர்ட் எச்சரித்திருந்தது. இந்நிலையில் அறநிலையத்துறை ஊழியர்கள் சென்னை நுங்கம்பாக்கத்தில் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

    அறநிலையத்துறை குற்றச்சாட்டு

    அறநிலையத்துறை குற்றச்சாட்டு

    அப்போது பேசிய அறநிலையத்துறை சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர் ஸ்ரீதர் அறநிலையத்துறை ஊழல் துறை என பொய்யான தகவல் பரப்பப்படுகிறது என குற்றம்சாட்டினார்.

    கருப்பு ஆடுகளை கண்டுகொள்ளவில்லை

    கருப்பு ஆடுகளை கண்டுகொள்ளவில்லை

    மேலும் அவர் பேசியதாவது, சிலை தடுப்பு பிரிவு ஐஜி பொன் மாணிக்கவேல் ஓரவஞ்சனையுடன் செயல்படுகிறார். அறநிலையத்துறையில் உள்ள கருப்பு ஆடுகளை ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் கண்டுகொள்ளவில்லை.

    நடவடிக்கை இல்லை

    நடவடிக்கை இல்லை

    ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் ஓரவஞ்சனையுடன் விசாரணை நடத்தினார். சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் கபூர், தீனதயாளன் மீது போதிய நடவடிக்கைகள் இல்லை என அறநிலையத்துறை சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர் ஸ்ரீதர் குற்றம்சாட்டினார்.

    சிபிஐக்கு மாற்றம்

    சிபிஐக்கு மாற்றம்

    முன்னதாக ஐஜி பொன் மாணிக்கவேலின் விசாரணையில் திருப்தியில்லை எனக்கூறி சிலைக்கடத்தல் வழக்கை சிபிஐக்கு மாற்ற தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    English summary
    The Endowment department employees have charged that the IG ponmanikkavel did not identify the black sheep in the department.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X