For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஐஐடி சென்னை விவகாரம்: பாஜக அரசால் விமர்சனத்தை ஏற்க முடியாதா?- கேட்கிறார் குஷ்பு

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: பிரதமர் மோடி தலைமையிலான அரசின் செயல்பாடுகளை விமர்சித்ததாக சென்னை ஐ.ஐ.டி-யில் செயல்படும் அம்பேக்தர், பெரியார் மற்றும் தலித் சிந்தனைகளை பரப்பிய மாணவர் அமைப்புக்குத் தடை விதிக்கப்பட்டது. இந்த அமைப்புக்கு தடை விதிக்க கோரி மனிதவள மேம்பாட்டு ஆணையம் பரிந்துரைத்ததன் பேரில், ஐ.ஐ.டி நிர்வாகம் தடை உத்தரவை பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.

அரசு அலுவலகங்களில் இந்தி மொழிப் பயன்பாடு கட்டாயப்படுத்தப்படுவது, மாட்டிறைச்சிக்கு தடை, இந்துத்துவ அமைப்புகளின் முரணான தலித் எதிர்ப்பு நடவடிக்கை என மோடி அரசின் செயல்பாடுகளை இந்த மாணவர் அமைப்பு விமர்சித்தது.

நாடு முழுவதும் கடுமையான எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, பெயர் குறிப்பிடப்படாத நபரின் புகாரின் அடிப்படையில் ஐ.ஐ.டி நிர்வாகம் மாணவர் அமைப்புக்கு தடை விதித்திருப்பது கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

அம்பேத்கார் பெரியார் மாணவர் அமைப்புக்கு விதிக்கப்பட்டுள்ள தடையைக் குறித்து சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்படுகிறது. நடிகையும், காங்கிரஸ்கட்சியின் செய்தி தொடர்பாளருமான குஷ்புவும் தனது எதிர்ப்பை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

ஐ.ஐ.டி-யின் மற்ற மாநிலப் பிரிவுகளில் உள்ள மாணவர்கள், எதிர்க்கட்சிகள், சமூக ஆர்வலர்கள் என பல தரப்பினரும் சென்னை ஐ.ஐ.டி நிர்வாகத்தையும் மத்திய அரசையும் இது தொடர்பாக கேள்வி எழுப்பி வருகின்றனர். இதனால் IIT Madras என்ற ஹேஸ்டேக் இந்திய அளவில் ட்விட்டர் ட்ரெண்டிங்கில் இடம்பெற்றுள்ளது.

குஷ்புவின் குரல்

அரசுக்கு எதிராக தனது கருத்தை முதல் ஆளாக பதிவு செய்வார் குஷ்பு. மாணவர் அமைப்புக்கு எதிராக ட்விட்டரில் பதிவிட்டுள்ள குஷ்பு, விமர்சனத்தை மோடி அரசால் ஏற்றுக்கொள்ள முடியாதா என்று கேட்டுள்ளார்.

வெட்கக் கேடானது

மாணவர்களின் கருத்து சுதந்திரத்திற்கு எதிரான இந்த நடவடிக்கை வெட்கக் கேடானது என்று பதிவிட்டுள்ளார் ஒரு சமூக வலைதாளவாசி

ஹிட்லர் ஆட்சியா?

நமது நாட்டை ஆட்சி செய்வது ஹிட்லரா? பாசிச ஆரிய செயல்பாடுகள்தான் இங்கு திணிக்கப்படுகிறது. நரேந்திர மோடி அரசு மக்கள் விரோத போக்கை விமர்சித்த ஐஐடி மெட்ராஸ் மாணவர் குழுவை தடைசெய்தது கொடுமை.

பாஜகவின் மற்றொரு முகம்

சுதந்திரத்தின் கழுத்து நெரிக்கப்படுவதுதான் மோடி ஸ்டைல். இது அவர்களின் அழுக்கான முகத்தைக் காட்டுகிறது என்று கூறியுள்ளார் ஒருவர்.

இந்திரா வழியில்

இந்திரா காந்தி வழியில் மோடியும் அவசர நிலையை ஏற்படுத்த வாய்ப்புண்டு என்று அச்சம் தெரிவித்துள்ளார் ஒருவர்.

வடகொரியா

இந்தியா இன்னொரு வடகொரியாவாக மாறி வருகிறது. அரசுக்கு எதிரான விமர்சனத்திற்கு தடை வழங்கப்படுவதைப் பார்த்தால் அச்சத்தை ஏற்படுத்துகிறது என்று பதிவிட்டுள்ளார்

English summary
The Indian Institute of Technology (IIT) Madras has taken action against a students' study group after receiving an anonymous complaint that it was criticizing the policies of the Narendra Modi government and spreading hatred against him, reports said. India is going to be new North Korea...getting banned for criticising government.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X