For Daily Alerts
Just In
எம்எஸ் விஸ்வநாதனுக்கு இளையராஜா நேரில் அஞ்சலி
மறைந்த இசையமைப்பாளர் எம்எஸ் விஸ்வநாதனின் உடலுக்கு இசையமைப்பாளர் இளையராஜா நேரில் அஞ்சலி செலுத்தினார்.
இன்று அதிகாலை எம்எஸ் விஸ்வநாதன் மரணமடைந்த செய்தியை அறிந்ததும், திருவண்ணாமலையிலிருந்த இளையராஜா உடனடியாக சென்னை திரும்பினார்.

எம்எஸ் விஸ்வநாதன் உடல் வைக்கப்பட்டுள்ள சாந்தோம் வீட்டுக்குச் சென்ற இளையராஜா, மலர் மாலை சாத்தி அஞ்சலி செலுத்தினார்.
எம்எஸ் விஸ்வநாதன் சில தினங்களுக்கு முன் உடல்நலமின்றி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்ற போது, அவரைச் சந்தித்து நலம் விசாரித்தார் இளையராஜா. அவருடன் சிறிதுநேரம் பேசினார் எம்எஸ்வி. சாப்பி மறுத்து வந்த எம்எஸ்விக்கு அப்போது இளையராஜா உணவு ஊட்டினார்.

இளையராஜாவும் எம்எஸ்வியும் மெல்லத் திறந்தது கதவு, இரும்புப் பூக்கள், செந்தமிழ்ப் பாட்டு, செந்தமிழ் செல்வன், விஷ்வ துளசி ஆகிய படங்களுக்கு இசையமைத்துள்ளனர்.