For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நேருக்கு நேர் சந்தித்த கள்ளக்காதலர்கள்.. கதறிய அபிராமி.. ரியாக்ஷனே கொடுக்காத சுந்தரம்!

கள்ளக்காதலர்கள் அபிராமியும் சுந்தரமும் நேற்று நீதிமன்றத்தில் நேருக்கு நேர் சந்தித்துக்கொண்டனர்.

Google Oneindia Tamil News

Recommended Video

    நேருக்கு நேர் சந்தித்த கள்ளக்காதலர்கள்.. கதறிய அபிராமி.. வீடியோ

    சென்னை: கள்ளக்காதலர்கள் அபிராமியும் சுந்தரமும் நேற்று நீதிமன்றத்தில் நேருக்கு நேர் சந்தித்துக்கொண்டனர்.

    சென்னையை அடுத்த குன்றத்தூர் மூன்றாம் கட்டளையை சேர்ந்தவர் அபிராமி. இவருக்கு அப்பகுதியில் உள்ள பிரியாணிக்கடை ஊழியருடன் கள்ளக்காதல் ஏற்பட்டது.

    இதையடுத்து அவருடன் வாழ நினைத்த அபிராமி, அதற்கு இடையூறாக இருந்த தனது இரண்டு குழந்தைகளை கடந்த மாதம் 30 மற்றும் 31ஆம் தேதிகளில் துடிக்க துடிக்க கொன்றார்.

    அபிராமி கைது

    அபிராமி கைது

    கணவரையும் கொல்ல கள்ளக்காதலனுடன் இணைந்து ஸ்கெட்ச் போட்ட நிலையில் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார் கணவர். பின்னர் சுந்தரத்தின் ஆலோசனைப்படி கேரளா தப்பிச்சென்ற அவரை நாகர்கோவிலில் கைது செய்தனர் போலீசார்.

    ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றம்

    ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றம்

    இதையடுத்து சென்னை கொண்டு வரப்பட்ட அபிராமி மற்றும் அவரது கள்ளக்காதலன் சுந்தரம் ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இருவருக்கும் 15 நாள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது.

    நேற்று மீண்டூம் ஆஜர்

    நேற்று மீண்டூம் ஆஜர்

    இதைத்தொடர்ந்து இருவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் 2 குழந்தைகளை கொன்ற வழக்கில் அபிராமியும் சுந்தரமும் நேற்று மீண்டும் ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

    12ஆம் தேதி வரை

    12ஆம் தேதி வரை

    அப்போது இருவரின் காவலையும் நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி அபிராமி மற்றும் சுந்தரத்தின் நீதிமன்ற காவல் அக்டோபர் 12ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

    ஒரே வேனில்

    ஒரே வேனில்

    இந்நிலையில் இருவரும் நீதிமன்றத்திற்கு வந்தது குறித்த பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது, புழல் சிறையில் இருந்து இருவரும் ஒரே வேனில்தான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். அப்போது இருவரும் நேருக்கு நேர் பார்த்துக்கொண்டனர்.

    ரியாக்ஷனே காட்டாத சுந்தரம்

    ரியாக்ஷனே காட்டாத சுந்தரம்

    சுந்தரத்தை பார்த்ததும் அபிராமி கண்ணீர்விட்டு அழுதார். ஆனால் சுந்தரம் எந்த ரியாக்ஷனும் காட்டாமல் இறுக்கமான முகத்துடனே அமர்ந்திருந்தார். அபிராமி தனது முகத்தை மறைக்கும் வகையில் கறுப்பு துப்பட்டாவால் சுற்றியிருந்தார்.

    காத்திருந்த காதல் மனைவி

    காத்திருந்த காதல் மனைவி

    அபிராமியை பார்க்க நீதிமன்றத்திற்கு அவரது உறவினர்கள் குடும்பத்தினர் என யாரும் வரவில்லை. ஆனால் சுந்தரத்தின் மனைவி முத்துலெட்சுமி தனது காதல் கணவரை காண நீதிமன்றத்தில் கண்ணீருடன் காத்திருந்தார்.

    சிறை அதிகாரிகளிடம் கண்ணீர்

    சிறை அதிகாரிகளிடம் கண்ணீர்

    அபிராமிக்கு தக்க தண்டனை கிடைக்க வேண்டும், அவருக்கு ஜாமீன் கோரப்போவதில்லை என அவரது தந்தை ஏற்கனவே கூறியிருந்தார். ஆனால் தனது குடும்பத்தாரிடம் தன்னை ஜாமீனில் எடுக்க கூறுமாறு அபிராமி சிறை அதிகாரிகளிடம் கூறி அழுதது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Illicit lovers Abirami and Sundaram has met eye to eye in Court yesterday. Abirami cried after seeing Sundaram but Sundaram did not show any reaction.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X