For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தில் அதீத கனமழைக்கு வாய்ப்பு.. இந்திய வானிலை மையம் வார்னிங்

Google Oneindia Tamil News

டெல்லி: தமிழகத்தில் அதீத கனமழைக்கான வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை உள்பட தமிழகம், புதுவையில் கனமழை பெய்து வருகிறது. இது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததை காட்டுவதாகவே நிபுணர்கள் கூறுகின்றனர்.

இந்த நிலையில் அடுத்த 2 நாட்களுக்கு சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அதீத கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

யப்பா சாமி.. காலைல இருந்து வெயில் அடிக்கிற மாதிரி அடிச்சு.. இப்ப சென்னையில் வெளுத்து வாங்குது மழை யப்பா சாமி.. காலைல இருந்து வெயில் அடிக்கிற மாதிரி அடிச்சு.. இப்ப சென்னையில் வெளுத்து வாங்குது மழை

இடியுடன் கூடிய கனமழை

இடியுடன் கூடிய கனமழை

இதுகுறித்து இந்திய வானிலை மையம் தனது அதிகாரப்பூர்வ பக்கத்தில் சில எச்சரிக்கைகளை விடுத்துள்ளது. அதில் டிசம்பர் 1-ஆம் தேதியான இன்று தமிழகம் மற்றும் புதுவையில் கனமழை முதல் அதிக கனமழை வரை பெய்யும். இடியுடன் கூடிய கனமழை பெய்யும்.

கர்நாடகம்

கர்நாடகம்

அது போல் டிசம்பர் 2-ஆம் தேதியும் தமிழகம் மற்றும் புதுவையில் கனமழை முதல் மிக அதிக கனமழை வரை பெய்யும். கேரளா, மாஹே, லட்சத்தீவு பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. கர்நாடகா, கேரளா உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும்.

புதுவை

புதுவை

டிசம்பர் 3, 4, 5 ஆகிய தேதிகளில் தமிழகம், புதுவையில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளது என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதீத கனமழை என்பது நிர்வாக காரணங்களுக்காக விடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இயல்பு வாழ்க்கை

இயல்பு வாழ்க்கை

மற்றபடி மக்கள் அச்சப்பட வேண்டிய அவசியம் இல்லை என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் சென்னை, திருவள்ளூரில் கனமழை பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

English summary
Indian Meteorological department says that Heavy to Very Heavy rain will be in Tamilnadu, Puducherry and Karaikkal.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X